இன்றைய ராசிபலன் – 29 நவம்பர் 2022

Rasi-palan-new-(1)
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிறப்பானதாக அமையும். புதிய தொழில், முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் உற்சாகமானதாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். சிலருக்கு வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் பிறருடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத வகையில் வீண் விரயங்கள் ஏற்படலாம். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் வெற்றிகரமானதாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அரசாங்க வழியில் அனுகூலம் ஏற்படும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் லாபம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும், நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்களில் நல்ல முடிவு உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் மற்றும் மனதளவில் உற்சாகம் ஏற்படும். பெண்கள் வழியில் சிலருக்கு லாபம் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் நண்பர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். சிலர் நீண்ட காலத்துக்கு பிறகு உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சற்று இழுபறி நிலை நீடிக்கும், மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி மேற்கொண்டால் வெற்றி பெறலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் நீண்ட கால கடன்களை வட்டியுடன் சேர்த்து அடைப்பீர்கள். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். வீட்டில் பெரியவர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும். சிலருக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் பணியிடங்களில் மேல் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வெளியூர் பயணங்களால் பெரிய அளவில் லாபங்கள் இருக்காது. தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிறருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நலம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். ஆரோக்கியம் சீராகும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதாரத்தில் இருந்த கஷ்ட நிலை தீரும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் பணிமாறுதல் உண்டாகும். சிலருக்கு நண்பர்கள் வழியில் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.

கும்பம்:
கும்ப ராசியின் இன்றைய தினம் உடல் மற்றும் மன நிலை சிறப்பாக இருக்கும். புதிய வாகனங்கள், சொத்துக்களை சிலர் வாங்குவார்கள். ஆக்கபூர்வமான சிந்தனைகள் மனதில் எழும். சிலர் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வார்கள்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் தொழில். வியாபாரங்களில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ஒருசிலருக்கு சுபகாரிய செலவுகள் ஏற்படும். தம்பதிகளிடையே சிறிது மனஸ்தாபம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும்.

- Advertisement -