இன்றைய ராசி பலன் – 29-05-2021

rasi palan - 29-5-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் பிணக்குகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி உங்களுக்குத்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இழுப்பறியில் போடப்பட்டிருந்த சில விஷயங்கள் மீண்டும் தூசி தட்டி எடுக்க முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். பெண்கள் கூடுதல் பொறுப்பை சுமக்கும் வாய்ப்புகள் வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த மந்த நிலை படிப்படியாக மாறும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பாராத செய்திகள் கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனை ஆகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை சோர்வடைய செய்யும். குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிரடியான முடிவுகள் வரவேற்கக் கூடியதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். பெரியவர்களை அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அரசு வழி காரியங்களில் அனுப்பியுள்ள பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்காத நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் மந்த நிலை காணும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிக்கல்கள் நீங்கும். சரி ஒருவர் புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் நிதானமாக கையாளுவது நல்லது. எதிர்பார்க்காத நபர்களின் மூலம் கிடைக்கும் செய்திகள் உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் சரளமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு முக்கிய முடிவையும் தள்ளி வைப்பது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் காலதாமதம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் விஷயங்களில் பெரிய தொகையை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் கவனம்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு செயலையும் போட்டி போட்டு செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது. மேல் அதிகாரிகளின் தொந்தரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு பிரச்சினைகளையும் எளிதாக சமாளிக்க கூடிய தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடைய மன நிலையில் குழப்பம் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் பேச்சுவார்த்தையில் நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உற்றார், உறவினர்கள் பெருமைப்படும் வகையில் நடந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. அரோகிய ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.