இன்றைய ராசி பலன் – 3-2-2020

rasi palan - 3-2-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களின் அபிப்பிராயங்களை நிர்வாகத்தில் தெரியப்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் மேலோங்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். பெண்களுக்கு சுய தொழில் முயற்சிகள் பலன் தரும். வீட்டு பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பீர்கள். கூட்டு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்துசேரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் மகிழ்ச்சியுடன் செயல்படக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகி திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய அனுபவங்கள் மூலம் சில நல்ல விஷயங்களை கற்றுத் தேர்வீர்கள். மாணவர்களின் கல்வி நிலை ஏற்றகரமாக இருக்கும். தெரியாத விஷயங்களை நண்பர்கள் மூலம் தெரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் சில பிரச்சனைகள் வந்து மறையும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். மனதிற்குப் பிடித்த மூலம் மன மகிழ்ச்சி கிட்டும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை சாதகமான சூழ்நிலையில் எதிர் கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதியவர்களின் தலையீடு இல்லாமல் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். நண்பர்களின் சேர்க்கையில் எச்சரிக்கை தேவை. பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகும். குடும்பத்தில் உற்சாகம் காணப்படும். நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் மேலோங்கும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கடன் பிரச்சினைகளினால் மன உளைச்சலில் காணப்படுவீர்கள். தேவையற்ற அலைச்சல் ஏற்படக்கூடும். எனினும் மனம் தளராமல் முயற்சி செய்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகோதர சகோதரிகளிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் இருப்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் லாபம் காண்பீர்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கடன் பிரச்சனைகள் தீர்வதற்கான சூழ்நிலை நிலவும். உங்களின் கடின முயற்சிக்கு உரிய பலன்கள் கிட்டும். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் லாபம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். புதிய முயற்சிகளை மேற்கொண்டு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் ஏற்றம் காண்பீர்கள். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக புதிய வித்தையை கற்றுக் கொள்வீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விளையாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சில மன சங்கடங்கள் ஏற்படக்கூடும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் சுயமாக முடிவு எடுப்பது நல்லது. கூட்டுத் தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில குழப்பங்கள் நீடிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒருசிலருக்கு நல்ல பலன் கிட்டும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில்நுட்பங்களை கற்று தேர்வீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டு மன சங்கடங்கள் உருவாக்கக்கூடும். எனினும் இறுதியில் சுபமாக முடிவு பெறும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது இன்றைய நாளை சிறப்பாக்கி தரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனநிம்மதியுடன் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சகோதர சகோதரிகளினால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. மேலதிகாரிகளால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர சகோதரிகள் மூலம் ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் லாபம் காணலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில குழப்பங்கள் இருக்கும். எதையும் மறைத்து பேசுவதைவிட வெளிப்படையாக இருப்பதே நன்மையை உண்டாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளினால் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை கட்டாயம் அமையும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான திட்டங்களில் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். கடன் பிரச்சினைகள் மூலம் மன சங்கடங்கள் உருவாகி மறையும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சுமூகமான சூழ்நிலையில் இருப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை இருக்கும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் நல்ல பலன் காணலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதிய பெண்களுக்கு வீட்டு பொருட்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வாகன யோகம் கிடைக்கப்பெறும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டு. நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் அமைதி நிலவும். சுயதொழில் புரியும் பெண்கள் லாபம் காண்பீர்கள். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். விநாயகரை வழிபடுவது நல்லது.

- Advertisement -