இன்றைய ராசி பலன் – 3-06-2021

rasi palan - 3-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இது வரை தள்ளிப் போய்க் கொண்டிருந்த முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடித்து பணியில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். சங்கடங்கள் தீர விநாயகரை வழிபடுதல் சிறப்பு.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முக்கிய முடிவையும் எடுக்கும் முன்னர் குடும்பத்துடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் தொல்லைகள் குறையும். சக பணியாளர்கள் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். நவகிரக வழிபாடு மேற் கொள்ளுதல் நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பகைவர்களை மன்னிக்கக் கூடிய மனப்பக்குவம் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீங்க நிதானமாக யோசிப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சமயோசிதமாக செயல்படுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் உறவு சிக்கல்கள் தீரும். இருவர் இடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் மேலும் வலுவாக உங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டிய காலகட்டமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சுயமாக சிந்திக்க கூடிய திறன் வளரும். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக நிற்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு எண்ணியபடி அமைவதில் இடையூறுகள் ஏற்படும். சிலருக்கு புதிய நட்பு வட்டம் ஏற்படலாம்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் அமையும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளை மேற் கொள்வதற்கான காலகட்டமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. விஷ்ணு வழிபாடு செய்ய நன்மை நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் வாய்ப்பு உண்டு. எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும். தொழில் மற்றும் வியாபார விருத்தி ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்க இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவி சிக்கல்கள் தீரும் ஒற்றுமை அதிகரிக்கும். முருகன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் பார்க்கும் இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் வெற்றி காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் கால தாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார விருத்தி ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் ஒப்படைக்கப்படும். சகோதர சகோதரிகள் ஒற்றுமை சிறக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஜாக்கிரதையுடன் இருப்பது நல்லது. வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை நீங்கும். புதிய பொருள் சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் அதில் சாதகமான பலன்கள் உண்டாகும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் படிப்படியான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். புதிய யுத்திகளை கையாள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வது தவிர்ப்பது உத்தமம். உத்தியோக ரீதியான பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் காரியம் ஒன்று நினைத்தபடியே நடக்க வாய்ப்புகள் அமையும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் விஷயத்தில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -