இன்றைய ராசிபலன் – 30 மார்ச் 2022

today rasi palan 30/03/2022
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அனுகூலமான நல்ல பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொலை தூர இடங்களிலிருந்து கிடைக்கக்கூடிய செய்தி முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்க செய்யும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். எதிர்பார்க்கும் வருமானத்தை அடையப் போகிறீர்கள். தொடர் முயற்சி வெற்றியை கொடுக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் நிதி சார்ந்த சிக்கல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே ஊடல் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பணத்தைக் கையாளுவதில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டி வலுவாகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூல பலன் பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருப்பது ஆபத்தை கொடுக்கும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய நேர்மறையான எண்ணங்களை அதிகரித்துக் கொள்வீர்கள். நடப்பது தான் நடக்கும் என்கிற மனப்பான்மை இருக்கும். சுபச் செய்திகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு கடுமையான போட்டி நிலவும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பல எதிர்ப்புகளை தாண்டி முன்னேற கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் உங்களை தேடும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பொறுமை தேவை.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தனி திறமையை மேலும் மெருகேற்றிக் கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. விமர்சனங்களை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முடிவுகள் திருப்தியை கொடுக்கும் வகையில் அமைய இருக்கிறது. தேவையற்ற மன சஞ்சலங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெருகும் வருமானம் உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடையப் போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமையுடன் பொறுப்புகள் கூடும். கணவன் மனைவி உறவில் பொறுமை தேவை.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடம்மாறி செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கட்டுக்கோப்பாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் பொழுது அலைச்சல் அதிகரிக்கும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய சிந்தனைகள் பிறக்கும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு விஷயத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய மனிதர்களின் ஆதரவு பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்கள் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். வெளியிடங்களில் கொடுத்து வைத்த பணம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அமைதி தேவை. உங்களுடைய நாணயம் உங்களை உயர்த்திக் காட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக பொறுப்புகள் டென்ஷனை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் கொடுக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் துணிச்சலுடன் முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் கவனம் தேவை. நண்பர்களின் வட்டம் விரியும். கணவன் மனைவி உறவுக்கு இடையே விரிசல் விழாமல் இருக்க பேச்சில் இனிமை தேவை.

- Advertisement -