இன்றைய ராசிபலன் – 30 மார்ச் 2023

mar 30 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப பலன்களை கொடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் நீங்கள் இடைவிடாத உழைப்பை கொடுப்பீர்கள். கணவன் மனைவிக்குள் சண்டைகள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கனவுகள் நிறைவேறும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திருப்பங்கள் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் ஒன்று நினைக்க அது வேறு ஒன்றாக நடக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் நினைத்ததை சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் நினைத்ததை செய்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடையும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளை தாண்டிய வெற்றி இருக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நெருங்கிய உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் சிலருக்கு மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளிடமிருந்து சில தொந்தரவுகள் வரக்கூடும் பொறுமையாக இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சிறு சிறு விஷயங்களில் கூட கோபப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இதய விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் பல எதிர்ப்புகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுமை வேண்டும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அவசரப்படாமல் இருப்பது நல்லது. அலட்சியம் ஆபத்தை கொடுக்கும். அனாவசிய பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இறை சிந்தனை அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பொறுமை வெற்றிகளை கொடுக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை எதிர்கொள்ள சிரமப் படுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் உங்கள் திறமைகளை வெளி கொணர்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நேர்மை வேண்டும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுயமாக சிந்திப்பது நல்லது. மற்றவர்களுடைய பேச்சை கேட்க வேண்டாம். கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் நீங்கள் எதிர் பார்த்த அளவிற்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை எண்ணிக்கை அதிகரிக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனம் நிறைந்த நல்ல அமைப்பாக இருக்கிறது. எதிர் பார்த்தது அப்படியே நடக்கும். சுய தொழிலில் உங்களை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் பின் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்லுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் அமைதி காப்பது நல்லது. சுப காரிய முயற்சிகளில் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் சமூக சிந்தனை அதிகரித்து காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனக்குழப்பம் தீருவதற்கான நல்ல வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களுடன் மரியாதையுடன் நடந்து கொள்வது நல்லது. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்தது நடப்பதற்கு காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் பெறுவீர்கள்.

- Advertisement -