இன்றைய ராசிபலன் – 30 மார்ச் 2024

Rasi-palan-new30
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் கொண்ட நாளாக இருக்கும். சிரமங்கள் வந்தாலும் அதை சமாளித்து இந்த நாளை நல்லபடியாக நகர்த்திச் செல்லும் அளவுக்கு திறமையும் உங்களிடத்தில் இருக்கும். கடவுளின் ஆசீர்வாதத்தை கொண்டவர்கள் நீங்கள். ஆகவே பிரச்சினைகளை கண்டு துவண்டு போய் நிற்காதீர்கள். எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்று துணிவோடு வேலைகளை செய்தால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக பிறக்கப் போகின்றது. இதுநாள் வரை வாழ்க்கையில் இருந்து வந்த தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய நேரம் காலம் வந்துவிட்டது. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் உடல் அசதி நிறைந்த நாளாக இருக்க போகின்றது. இதனால் வேலையில் பின்னடைவு ஏற்படும். அலுவலகத்தில் தூக்கம் தூக்கமாக கூட சில பேருக்கு வரும். சோம்பேறித்தனத்திலிருந்து விடுபட்டு உடல் ஆரோக்கியத்தை பெற தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். காலையில் எழுந்தவுடன் மனதை ஒரு பத்து நிமிடம் அமைதியாக வைத்து தியானம் செய்துவிட்டு பிறகு வேலையை தொடங்கவும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சின்ன சின்ன சண்டைகளும் பிரச்சனைகளும் வரும் நாளாக இருக்கப் போகின்றது. முழுசாக வேலையில் ஆர்வம் செலுத்த முடியாது. கொஞ்சம் மூட் அவுட் ஆகவே இருக்கப் போகிறீர்கள். இதனால் அடுத்தவர்களிடம் எரிஞ்சி விழுவீங்க. உங்களைப் பார்த்தாலே நண்பர்கள் கூட தெறித்து ஓடுவார்கள் அந்த அளவுக்கு இன்று உங்களுடைய நாள் சுடச்சுட இருக்கும். பார்த்து கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். நம்பிக்கையின் பேரில் யாராவது கடன் கேட்டால் தூக்கி கொடுத்துறாதீங்க. திரும்பி வராமல் போவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். இருக்கக்கூடிய வேலையை பக்குவமாக செய்தால் மட்டும் போதும். புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. நஷ்டத்தில் இருந்து தப்பிக்க கவனம் தேவை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எந்த வேலையிலும் ஆர்வம் செலுத்த முடியாது. இதனால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்கலாம். தொழிலில் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். மாறாக அதிகாரம் செய்யாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வருமானம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வசூல் ஆகும். புதுசாக வண்டி வாகனம் சொத்து சுகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு சம்பந்தமான பேச்சு வார்த்தைகளை நடத்தலாம். மாமியார் மருமகள் உறவுகள் பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். எல்லா வேலையிலும் திறமையாக செயல்பட வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு தகுந்த ஊதியமும் உங்களுக்கு கிடைக்கும். முன்னேற்றம் நிறைந்த நாள் இது. புதுசு புதுசா நாலு விஷயங்களை கற்றுக்கொண்டு அதை நாலு பேருக்கு பயன்படும் படி செய்யக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன துன்பங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு பிடித்தவர்களே உங்கள் மனசை கஷ்டப்படுத்தலாம். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சின்ன ரத்த காயம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இல்லத்தரசிகள் காய்கறி நிற்கும்போது, அடுப்பில் சமைக்கும்போது ஜாக்கிரதையா இருக்கணும். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கவனங்கள் இருந்தால் வரும் துன்பங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. யாரைப் பார்த்தாலும் கோபம்தான் முன்பு வந்து நிற்கும். பொறுமையை இருக்காது. இதனால் நிறைய எதிரிகளை சம்பாதிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். நண்பர்கள் கூட எதிரியாக மாறலாம். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் செய்யாதீங்க. பொறுமையா இருங்க. கோபத்தை முடிந்தவரை கட்டுப்படுத்த பாருங்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தலாம். கூடுமானவரை அதிக வட்டிக்கு பணம் வாங்கி முதலீடு செய்யாதீங்க. சின்ன சின்ன வியாபாரிகள் கூட நிறைய லாபத்தை ஈட்டக்கூடிய நாள் இது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் சுப காரியம் நிகழ்ச்சிகளை பற்றி பேச தொடங்குவார்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த நாளாக தான் இருக்க போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பிரஷர் இருக்கும். சின்ன சின்ன பொய் சொன்னதால் சில பேர் மாட்டிக் கொள்வீர்கள். கூடுமானவரை எந்த சூழ்நிலையிலும் உண்மையை சொல்லி பழகுவது நல்லது. இல்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. தொழிலில் புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம்.

- Advertisement -