இன்றைய ராசிபலன் – 30 ஏப்ரல் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மனமகிழ்ச்சியுடன் இருக்கும். அலுவலகத்தில் பணிகளை சுலபமாக செய்து முடிப்பீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தைரியம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலர் தீர்த்த யாத்திரை மேற்கொள்வார்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய விடயங்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் பெருகும். பிற்பகலுக்கு மேல் பிறரிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சிலருக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். சிலர் மகான்களை தரிசித்து ஆசி பெருவீர்கள்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் எதிரிகள் தானாக ஒழிவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பொது சேவைகளில் அதிக ஈடுபாடு உண்டாகும். புதிய மனிதர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். ஒரு சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படும். கலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். நீண்ட காலம் இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலர் வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு காரிய தடைகள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவார்கள். சமுதாயத்தில் பெரிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும் தம்பதிகளை இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் புதிய காரியங்களில் ஈடுபடுவதற்கு முன்பாக பலமுறை யோசித்து ஈடுபடுவது கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை வந்து சேரும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். உறவினர்களின் ஆதரவும், அதனால் ஆதாயமும் உண்டாகும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய காரியங்களில் ஈடப்பட கூடாது. வாகன பயணத்தின் போது கவனம் தேவை. சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வருகையால் சிலருக்கு செலவுகள் ஏற்படும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் புதிய வீடு, வாகனம் வாங்குகின்ற யோகம் ஏற்படும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பும், ஆசிகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும் சிலருக்கு எதிர்பாராத தனவரவு இருக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் சற்று தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள்.

- Advertisement -