இன்றைய ராசிபலன் – 30 டிசம்பர் 2023

Rasi-palan30
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உதவி செய்யக்கூடிய மனப்பான்மை சமுதாயத்தில் உங்களை உயர்த்தும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கடன் சுமை குறையும் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். எந்த பிரச்சனைகளை கண்டும் பயப்பட மாட்டீங்க. எதிரிகளை எதிர்த்து போராடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும். உங்களைப் பார்த்து பயந்து சில எதிரிகள் தானாகவே ஒதுங்கி விடுவார்கள். குடும்பத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மாமியார் மருமகள் உறவு பிரச்சனையை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் என்று எல்லா விஷயத்தையும் கொஞ்சம் பொறுமையாக இருக்கணும். புதிய முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளிப் போடுங்கள். கோபப்படாதீர்கள். பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்கள். ஏதாவது முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் பெரியவர்களின் ஆலோசனையை பெறுவோம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத தோல்வி உண்டாகும். ஆனால் தோல்வியை கண்டு பயந்து போகக்கூடாது. சோர்ந்து போகக்கூடாது. உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு கடவுளின் ஆசிர்வாதம் இருக்கிறது. உங்களுக்கு நன்மை நடக்கும் என்று மனதார நம்புங்கள். குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். சம்பள உயர்வு கிடைக்கும். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது மட்டும் பெண்கள் சமையலறையில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். கவனக்குறைவோடு சமைக்கக்கூடாது ஜாக்கிரதை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். இத்தனை நாட்களாக தொடர்ந்து வந்த பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். மாமனார் வழி உறவால் ஆதாயம் கிட்டும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருந்துக்கோங்க. பொருட்களை பத்திரமாக பார்த்துக்கோங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் திறமையாக செயல்படுவீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் நிறைந்த நாள் இது. தொழிலில் முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உணர்வுகளை வெளிப்படுத்தும் நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கோபமாக இருந்தாலும், துக்கமாக இருந்தாலும், உள்ளே வைத்துக் கொள்ள மாட்டீர்கள். எல்லா விஷயங்களையும் இன்று வெளிப்படையாக சொல்லிவிட்டு மனதை லேசாக்கி கொள்வீர்கள். நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் அடையலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் துணிச்சலோடு செய்ய மாட்டீங்க. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எல்லா விஷயத்தையும் தள்ளி போடும் மனப்பக்குவம் தான் இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். தலைபாரம் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தோடு சாப்பிடுங்கள் நேரத்திற்கு சாப்பிடுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனசு தெளிவாக இருக்கும். அடுத்தவர்களுக்கு அட்வைஸ் செய்யும் அளவுக்கு உங்களுடைய பக்குவம் வெளிப்படும். நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். அலுவலகப் பணியில் சின்ன சின்ன பின் அடைவு உண்டாகும். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீர்கள். நீண்ட நாள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சொந்த பந்தங்களுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் சரியாகும். எதிரி தொல்லை நீங்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை முதலீட்டில் கவனம் தேவை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக அமையும். இத்தனை நாள் அலைச்சலோடு இருந்த வேலை, இன்று சுலபமாக முடியும். சிக்கலான பிரச்சனைகளுக்கு இன்று சுலபமாக தீர்வு கிடைக்கும். சொத்து பிரச்சனை உங்களுக்கு சாரதக்கமாக தீர்ப்பாகும். புதுசாக வண்டி வாகனம் தங்கம் போன்ற பொருள்கள் வாங்குவதற்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

- Advertisement -