இன்றைய ராசி பலன் – 30-06-2021

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாகத் தான் அமையப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருப்பினும் கடினமான வேலையை கூட சுலபமாக முடித்துவிட்டு பாராட்டுகளை வாங்கி விடுவீர்கள். நீங்கள் எதிர்பாராத நல்ல செய்தி ஒன்று உங்களுக்கு காத்திருக்கின்றது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல துவக்கமாக இருக்கும். தேவையற்ற பிரச்சினைகளும் மன கஷ்டமும் ஒரு பக்கம் இருந்தாலும், உங்களுடைய விடாமுயற்சி உங்களுக்கு கை கொடுக்க போகின்றது. எதையும் சாதிக்க வேண்டுமென்ற தன்னம்பிக்கையை தளர விடாதீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக இருக்கப்போகிறது. புதிய முயற்சிகளை தொடங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகளால் பெற்றவர்களின் நிலை உயரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. நிம்மதியாக ஓய்வு எடுத்து, நிம்மதியாக சாப்பிட்டு நிம்மதியாக பொழுதை கழிக்க போகிறீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று சுமாரான நாளாகத் தான் இருக்க போகிறது. உறவினர்களிடையே சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அனுசரித்து சென்றால் பிரச்சனை இல்லை.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபிட்சமான நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் தொடங்கும். சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகை இருக்கும். சுபச் செலவுகளும் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பாராட்டுக்கள் நிறைந்த நாளாக அமையப்போகின்றது. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை பாராட்டும்படி, நீங்கள் சில புத்திசாலித்தனமான காரியங்களை செய்யப்போகிறார்கள். அறிவு திறமை அதிகரிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தை தரப்போகின்றது. இதுநாள் வரை இருந்த உடல் உபாதைகள் இன்றிலிருந்து படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். மனநிம்மதி உண்டாகும்
குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டு.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாகத்தான் இருக்கப்போகின்றது. தொழிலில் சில சிக்கல்கள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. உஷாராக இருந்து கொள்ளுங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை செய்யாமல் இருக்கவேண்டும். உங்களுடைய வேலையை எப்போதும் போல நீங்கள் பார்த்து கொண்டால் பிரச்சனை கிடையாது. அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாகத்தான் இருக்க போகின்றது. கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒரு நல்ல வழி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். சம்பள உயர்வு பற்றிய பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலை செய்யும் இடத்தில் அலைச்சல்கள் உண்டாகும் தொழிலில் பங்குதாரர்கள் இடையே வாக்கு வாதங்கள் வர வாய்ப்பு உள்ளது மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். முன் கோபம் வேண்டாம் மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.

- Advertisement -