இன்றைய ராசிபலன் – 31 ஜனவரி 2024

Rasi-palan-new31
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு சிந்தனை மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும் நாள். இன்று‌ இந்த மாதத்தின் கடைசி நாள். நாளை ஏகப்பட்ட பிரச்சனைகள் காத்துக் கொண்டிருக்கிறது. செலவுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திப்பீர்கள். கவலைப்படாதீங்க. எல்லா தேவைகளுக்கும் ஆண்டவன் உங்களுக்கு கொடுத்துக் கொண்டே இருப்பான். சிந்தனையை கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு அன்றாட வேலையிலும் கவனம் செலுத்தனும். கவனக்குறைவாக இருந்தால் பிரச்சனைகள் வரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் சில பேர் வரக்கூடிய சம்பளத்துக்கு கணக்கு போட்டுக் கொண்டே இருப்பார்கள். அடுத்த மாதம் இந்த செலவு இருக்குது. அந்த செலவு இருக்குது அப்படி என்று பட்ஜெட் போடக்கூடிய நாளாக இருக்கும். பட்ஜெட்டில் சின்ன துண்டு விழுவது சகஜம்தான். அதை நினைத்து கவலைப்படாதீங்க. இன்னும் கொஞ்சம் அதிகம் சம்பாதிப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள். இன்று புதிய முயற்சிகளில் வெற்றி காணலாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். சில பேருக்கு முன்கூட்டியே சம்பளம் வந்திருக்கும் அல்லவா. மாத இறுதி நாள் என்றால் அக்கவுண்டில் பணம் வந்து விழுந்து விடும். இந்த பத்து நாளைக்கு நாம கொஞ்சம் பணக்காரர் இருப்போம் இல்ல. அதனால இந்த சந்தோஷத்தில் துள்ளி குதிப்பீர்கள். வீட்டிற்கு கொஞ்சம் ஸ்னாக்ஸ் வாங்கிட்டு போறது, மனைவிக்கு பிடித்த பொருளை வாங்கி கொடுப்பது, போன்ற மகிழ்ச்சியில் ஈடுபடுவீர்கள். சம்பளம் வராதவர்களுக்கு கொஞ்சம் திண்டாட்டம் இருக்கும் சரியாயிரும். ஆனால் உங்களுக்கும் இன்று சந்தோஷம் கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சுறுசுறுப்போடு இன்றைய நாளை தொடங்கி, முடிக்க போகிறீர்கள். இன்று மாலை கொஞ்சம் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கையில் இருக்கும் பணத்தை எல்லாம் கொண்டு போய் செலவுக்காக கொட்டி விடுவீர்கள். இதனால் மனசு கொஞ்சம் கஷ்டப்படும். கவலைப்படாதீங்க சம்பளம் வந்ததும் எல்லாம் சரியாகிவிடும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராக இருக்கக்கூடிய நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப அப்பப்ப பணம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு வருமானம் வரும். வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு பிள்ளைகளின் கையால் பணம் கிடைக்கும். இதனால் மன நிறைவான நாளாக தான் இருக்கப் போகின்றது. சொந்தத் தொழிலில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் கவனம் இல்லை என்றால் சின்ன சின்ன இழப்பு, பேரிழப்பாக மாறிவிடும் ஜாக்கிரதை.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கவனக்குறைவாக இருக்கும் பட்சத்தில் வீண் விரைய செலவுகள் மருத்துவ செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் கொஞ்சம் அக்கறையோடு பார்த்துக் கொள்ளுங்கள். வேளையில் இருந்த பிரச்சனைகள் சரியாகிவிடும். தொழிலில் இருந்து வந்த நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாகும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் வங்கியில் இருந்து கிடைக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் துணிச்சலோடு செயல்படுவீர்கள். மனதில் தேக்கி வைத்திருந்த எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேசி விடுவீர்கள். கணவன் மனைவிக்குள் பிரச்சனை இருந்தால் அது இன்று பெரிய வாக்குவாதமாக மாறி இறுதியில் சமூகமாக முடிந்துவிடும். நீண்ட நாள் சந்தேகங்களுக்கு விடை கிடைத்து விடும். பயப்படாதீங்க உங்களுடைய துணிச்சல், உங்களுக்கு வெற்றி தரும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் வெற்றியைத் தரும். புது வேலை தேடுவது புது தொழில் தொடங்குவது, புதுசா எதாவது பொருள் வாங்குவது, அப்படி ஏதாவது இருந்தால் இன்றைக்கு செய்யலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பதவி உயர்வு கூட சில பேருக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வரக்கூடிய வாய்ப்புகளை வேண்டாம் என்று தட்டிக் கழிக்காதீர்கள். பொறுப்புகள் அதிகமாகும் போது கொஞ்சம் வேலை செய்யக்கூடிய நேரமும் அதிகம் ஆகத்தான் செய்யும். பொறுமையை கடைப்பிடித்தால் நிச்சயம் கூடுதல் பலன் கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கைக்கு எட்டியது வாழ்க்கை எட்டாமல் போக வாய்ப்புகள் உள்ளது. நிறைய எதிர்பார்ப்புகளோடு இருப்பீர்கள். ஆனால் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாமல் மனம் உடைந்து போவீர்கள். அதனால் இன்று காலை முதலே எதிர்பார்ப்பை குறைத்துக் கொண்டால் அதிகமான மன உளைச்சல் இருக்காது. உங்க வேலையை நீங்க பாருங்க. பலன் வரும்போது வரட்டும். கடவுள் கொடுக்க வேண்டியது நிச்சயம் கொடுப்பான்.

மகரம்


மகர ராசிக்காரர்கள். இன்று கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது. ரொம்ப நம்பிக்கையா இருப்பீங்க, இது எனக்கு கிடைச்சிடும் இந்த பணம் இன்னைக்கு வந்துரும் அப்படின்னு. ஆனா அந்த இடத்தில் ஏமாற்றம் இருக்கும். ஆகவே எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டு இன்று நீங்கள் உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தனும். வாழ்க்கை துணை சொல்வது கேட்டு நடப்பது நல்லது. வீண் விரைய செலவை குறைக்கணும். கடன் வாங்கும் பழக்கத்தை குறைக்கணும் இன்று கட்டாயம் கடன் வாங்கவே கூடாது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு உங்கள் நாளை தொடங்குவீர்கள். பெண் பிள்ளைகளின் மூலம் மனசு சந்தோசம் அடையும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. ஆனால் இந்த நிதி நிலைமையில் மட்டும் கொஞ்சம் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள். எவ்வளவு தான் முட்டி மோதினாலும் அதை மட்டும் உங்களால் சரி கட்டவே முடியாது. தினம் தினம் வரக்கூடிய சந்தோஷத்தில், கொஞ்சம் கஷ்டம் இந்த பணக்காசும் கூட கவலைப்படாதீங்க. செலவை குறைங்க. எல்லாம் சரியாயிடும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று முன்பின் தெரியாதவர்களின் நட்பு கூடாது. யாரோ ஒருவர் சொல்கிறார் என்பதற்காக நீங்க உங்க வாழ்க்கைகாகாண முடிவை எடுக்கவே கூடாது. உங்க கூடவே வேலை செய்வாங்க. அவங்களுக்கு அந்த வேலை செட்டாகாமல் இருக்கும். அவர்கள் வேலையை விட்டு போகிறார்கள் என்றால், நீங்களும் அதையே பின்பற்றக் கூடாது. உங்களுக்கு வேலை பிடிச்சிருக்கா, உங்களுக்கு வேலை நல்ல பேர் இருக்கா, அப்ப கம்முனு நீங்க உங்க வேலையை செய்யுங்கள். அடுத்தவர்களை பார்த்து இன்று நீங்கள் ஏதாவது செய்தால் அது உங்களுக்கு பிரச்சனையை கொடுத்து விடும் ஜாக்கிரதை. புலியை பார்த்த பூனை சூடு போட்டுக் கொண்ட கதை தான் பின்பு.

- Advertisement -