இன்றைய ராசிபலன் – 31 மார்ச் 2023

mar 31 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பற்றிய சிந்தனையை தவிர்க்கவும். சுயதொழிலில் லாபம் அதிகரிக்க கூடுதல் ஒத்துழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெற்றியில் இடையூறுகள் வரக்கூடும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுய முடிவு எடுப்பது பல வகைகளில் நன்மை தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் நட்புகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் தவறவிடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வீண் செலவுகளை செய்யாதீர்கள்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிலருக்கு உங்கள் செயல் அதிருப்தியாக இருக்க வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் உள்ளவர்களுக்கு கூட்டாளிகள் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து சொல்லுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்பட போகிறது, மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு துறை சார் நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் குறையும். சுய தொழிலில் நினைத்தது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவசரம் வேண்டாம்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பாசம் மற்றவர்களுக்கு புரியக்கூடும். எதிர்பாராத விஷயங்களில் நீங்கள் மகிழ்ச்சி அடைய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வமுடன் இருப்பீர்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்மை நடக்கும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல செய்திகளை பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் உடன் இருப்பவர்களை தேவையில்லாமல் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை வளரும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுமைகளை படைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்கள் வெறுப்பு விருப்புகளை மறந்து செயல்படுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் வட்டம் விரிவடைய கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பப் பிரச்சனைகளில் மற்றவர்களை தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காண பெரிய மனிதர்களுடைய ஆதரவை பெறுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வீண் விரயங்கள் செய்யாதீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தகாத நண்பர்களின் சேர்க்கையை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -