இன்றைய ராசிபலன் – 31 மார்ச் 2024

Rasi-palan-new31
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கப் போகின்றது. மனதிற்கு பிடித்த நபரை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். விடுமுறை நாள் என்பதால் இன்று குடும்பத்தோடு நேரத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். இன்று மாலை சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமான இந்த நாளில் மறக்காமல் வீட்டை சுத்தம் செய்யும் வேலையையும் முடிச்சிடுங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப பொறுமையா இருப்பீங்க. உங்களுடைய வேலையில் எந்த பிரச்சனையும் இருக்காது. மற்ற நாளை விட இந்த நாள் ரொம்ப ரொம்ப சூப்பராக கடந்து போகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். வெளியூர் பயணங்கள் நன்மையை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். ஏதாவது வேலை செய்து அதில் தோல்வி அடைந்து விட்டால் உடனே மன வருத்தப்படக்கூடாது. தோல்வியை தூக்கி தூர போட்டு விட்டு அடுத்து என்ன வேலையையோ அதை செஞ்சிருங்க. நிச்சயம் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும், அதை சகஜமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் உங்களிடத்தில் வரவேண்டும். ஏதாவது பிரச்சனை என்றால் உடனே துவண்டு போய் அப்படியே உட்காராதிங்க. பிரச்சனைக்கு உண்டான வழியை தேடும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மனதிருப்தியை கொடுக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். மன நிம்மதி அடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் கேட்காமலேயே உயர் பதவிகள் உங்களுக்கு கிடைக்கும். சில பேருக்கு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். உடலுக்கு சூட்டை கொடுக்கக் கூடிய உணவு பண்டங்களை சாப்பிடுவதை இன்று தவிர்க்கவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.எதிரி தொல்லை நீங்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். எதையாவது புதுசாக சாதிக்க வேண்டும் என்று போராடிக் கொண்டே இருப்பீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதுப்புது ஐடியாக்களை எடுத்து விடுவீங்க. இதனால் எதிராளிகள் உங்களைக் கண்டு பயப்படுவார்கள். நாலு பேர் மதிக்கத்தக்கும் வகையில் உங்களுடைய நடவடிக்கைகள் இன்று இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாகவே இருக்கும். கொஞ்சம் கோபத்தோடு சிடுசிடென்னு இருப்பீங்க. உங்கள் வீட்டில் இருப்பவர்களோடு சண்டை சச்சரவுகள் வரும். அதை சமாளிக்க வேண்டும் என்றால், உங்களுடைய கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். மூன்றாவது நபர்களை முழுசாக நம்பாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் உங்களுடைய கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அடுத்த தேர்வுக்கு தயாராகும் போது அலட்சியமாக இருக்கக் கூடாது. கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துருங்க வாக்குவாதம் செய்யாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். எதிர்பார்க்காத பணவரவு இருக்கும். நல்ல பெயர் எடுப்பீங்க. சந்தோஷத்தில் மனது நிரம்பி இருக்கும். மனைவிக்கு புடிச்ச பொருட்களை வாங்கி பரிசாக கொடுப்பீர்கள். சுப செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விளக்கும். நிம்மதியாக உங்களுடைய இந்த நாள் நகர்ந்து செல்ல போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையை சமாளிக்க சில பேருக்கு திண்டாட்டம் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். செலவை குறைக்கவும்.

- Advertisement -