இன்றைய ராசிபலன் – 31 அக்டோபர் 2023

daily-rasi-palan31
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இன்று நினைத்த காரியத்தில் வெற்றி அடைந்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பீர்கள். நினைத்ததை சாதிக்காமல் விட மாட்டீர்கள். இன்றைய நாள் வெற்றிக்காகவே உங்களுக்கு பிறந்தநாள் போல செல்லும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி கடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சேமிப்பை உயர்த்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும்., வெற்றி கிடைத்தாலும் தோல்வி கிடைத்தாலும், இரண்டையும் சகஜமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். மேலதிகாரிகளே உங்களை ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்படலாம். நீங்கள் நினைத்த காரியங்கள் எதுவும் சரியாக நடக்காது. அதனால் மன உளைச்சல் ஏற்படும். கொஞ்சம் சோகமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். விலை உயர்ந்த பொருட்கள் பணம் நகைகள் இவற்றை பாதுகாப்பாக வைக்கவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்தோடு இருந்தால் சில பிரச்சனைகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான சில முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். பிக்கல் பிடுங்கள் பிரச்சினை எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டு விட்டு, நிம்மதியாக தூங்குவீங்க. நல்ல சாப்பாடு இருக்கும். மற்றது எதைப் பற்றியும் மனது யோசிக்காது. குடும்ப விஷயங்களை மட்டும் மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் வரக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். வீட்டில் இருக்கும் இருக்கும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் அந்தஸ்து உயரும். சொந்த தொழிலில் எதிர்பாராத வெற்றி காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட தூர பயணத்தின் போது கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளவும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அலட்சியமாக நீங்கள் செய்யும் சின்ன தவறு பெரிய அளவில் பின் விளைவுகளை கொடுத்து விடும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தை தடுக்கவும் வீட்டு சாப்பாடு சாப்பிடுவது நல்லது. ஆரோக்கியம் கெடும் படி கண்விழித்து ரொம்பவும் உடம்பை அலட்டிக்கொண்டு எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நண்பர்கள் உறவினர்கள் எல்லோரும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொலைபேசியின் மூலம் வரும் நல்ல செய்தி மணமகிழ்ச்சியை கொடுக்கும். வேலையில் நல்ல பெயர் வாங்குவீங்க. தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வும் காத்துக் கொண்டிருக்கிறது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் அமைதியாக இருந்தாலும் பிரச்சனை தானாக வீடு தேடி வரும். அது உறவுகள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும், வாழ்க்கை துணை மூலமாகவும் கூட வரலாம். பிள்ளைகள் மூலமாகவும் இருக்கலாம். கொஞ்சம் கவனத்தோடு இருந்து கொள்ளுங்கள். முன் கோபத்தை குறைத்து நிதானத்தோடு யோசித்தால் பிரச்சனையில் இருந்து தப்பிக்கும் வழி கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பொழுதுபோக்கு நிறைந்த நாளாக இருக்கும். தலைக்கு வேலை இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். பெரிதாக பிரச்சனை வர வாய்ப்புகள் இல்லை. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சுப செய்திகள் சந்தோஷத்தை கொடுக்கும்‌. கொஞ்சம் கையில் இருக்கும் பணம் வீணாக செலவாகும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய பொறுப்புகள் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் மட்டும் சின்ன பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் எதையும் யோசிக்காமல் முடிவு எடுக்காதீங்க. அடம்பிடித்து சாதிக்க வேண்டாம். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்தால் பிரச்சனை இல்லை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் சாதிக்க முடியாத விஷயங்களை இன்று சாதித்துக் கொள்வீர்கள். பேச்சாளர்கள், ஆசிரியர்கள், இவர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமையல் அறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது, அடுப்பில் நின்று சமைக்கும் போது கவனம் தேவை.

- Advertisement -