இன்றைய ராசிபலன் – 31 டிசம்பர் 2023

Rasi-palan31
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். எந்த வேலையிலும் அலட்சியமாக இருக்கக் கூடாது. உங்களுக்கு கொடுத்த வேலையை நீங்கள் தான் சரியாக முடிக்க வேண்டும். நீங்கள் இன்னொருவரை நம்பி, உங்க பொறுப்பை அடுத்தவர் கையில் ஒப்படைக்காதீங்க. பிறகு கெட்ட பெயர் உங்களுக்கு கிடைத்துவிடும். ஜாக்கிரதையா இருந்துக்கணும். இன்றைய நாள் விடுமுறை நாளாக இருந்தாலும் சில கூடுதல் வேலைகள் உங்களுக்கு இருக்கும். அதை சரியாக முடிக்க வேண்டியது உங்களுடைய கடமை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கும் நாளாக இருக்கும். நிம்மதியான தூக்கம் நிம்மதியான சாப்பாடு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக செய்ய முடியாத வேலைகளை முயற்சி எடுத்து இன்று செய்து முடிப்பீர்கள். சில பேர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தேவையான வேலைகளை செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புத்தாண்டு கொண்டாட்டம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நீங்கள் சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவீங்க. அதற்கு தேவையான வேலைகளை செய்வதில் கொஞ்சம் செலவும் ஆகும். மகிழ்ச்சி நிறைந்த நாள் தான். ஆனால் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் உங்களுடைய வேலைகளை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். இன்று மதியம் வீட்டு சாப்பாடு நல்ல உறக்கம் இருக்கும். மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். குழந்தைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். இந்த புத்தாண்டு உங்களுக்கு சந்தோஷமான புத்தாண்டாக பிறக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. எல்லா விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. மனைவியின் பேச்சுக்கு மரியாதை கொடுங்கள். இன்று மதியம் வரை சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். மாலை நேரம் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு கிடைத்து விடும். அதன் பிறகு சந்தோஷமாக குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். புத்தாண்டை எப்படி வரவேற்பது என்ற கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுமுகமான நாளாக இருக்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. உங்களுடைய வேலையில் எந்த தடையும் இருக்காது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் இருக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்லது நடக்கும். அனுகூலம் நிறைந்த இந்த நாளில் வீட்டில் சுப காரியம் பேச்சுகளும் தொடங்கலாம். நல்லதே நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் கூடுதல் உழைப்பை போட வேண்டும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்தால் எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்காது. அதற்காக முயற்சி செய்யாமல் விட்டாலும்,சில தோல்விகள் உங்களை வாழ்க்கையில் பின்னுக்கு தள்ளிவிடும். விடாமுயற்சி மட்டுமே இன்று உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். குறுக்கு வழியை பயன்படுத்த வேண்டாம். தெரியாத மூன்றாவது மனிதர்களின் பேச்சை கேட்காதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிகாரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். உங்களை அடுத்தவர்கள் பாராட்டும் அளவுக்கு நல்லது நடக்கும்‌. பதவி உயர்வு சம்பள உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பணிவோடு பேசுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். முன்கோபத்தை குறைக்கணும். பெரியவர்களுக்கும், பெரிய பதவியில் இருப்பவர்களுக்கும் கட்டாயம் மதிப்பு மரியாதையை கொடுக்கனும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்தது சரியான நேரத்தில் நடக்காது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஏமாற்றத்தை தாங்கும் மனப்பக்குவம் தேவை. உடைந்து போகாதீங்க. எந்த பிரச்சினையாக இருந்தாலும் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரச்சனைக்கு உண்டான தீர்வை அவர்களிடம் எதிர்பார்க்கலாம்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று புத்திசாலித்தனத்தோடு நடந்து கொள்ள வேண்டும். யாரையும் ஏமாற்றக்கூடாது. அதற்காக எதுவும் தெரியாமல் ரொம்பவும் வெகுளியாகவும் இருக்காதீங்க. சில சூட்சமங்களை தெரிந்து கொண்டு காயை நகர்த்தினால் தான் உங்களுக்கான வெற்றி கிடைக்கும். புது வேலை, புது காண்ட்ராக்ட் இப்படி ஏதாவது முயற்சி செய்வதாக இருந்தால் சில தந்திரங்களை பயன்படுத்தி தான் ஆக வேண்டும். இன்று உங்களுக்கு வேகத்தை விட விவேகம் ரொம்ப ரொம்ப முக்கியம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உயர் பகுதிகளில் தேடி வரும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீங்க. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டில் இருப்பவர்களுடன் நல்லுறவு பழகுவதன் மூலமும் சில நன்மை நடக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு எதிர்கால வெற்றிக்கு துணை புரியும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வாய்ப்புகளைத் தவிர விடுவீர்கள். சில விஷயங்களை நிதானமாக யோசித்து முடிவு எடுக்கவும். முன்கோபத்தை குறைக்கவும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டால் நல்லது நடக்கும். எல்லாம் எனக்குத்தான் தெரியும் என்று அடம் பிடித்து முன்பின் யோசிக்காமல் தெரியாத ஒரு விஷயத்தில் காலை வைக்காதீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. சின்ன சின்ன தவறுகள் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுத்து விடும் ஜாக்கிரதை.

- Advertisement -