இன்றைய ராசி பலன் – 5-2-2020

rasi palan - 5-2-2020

மேஷம்:
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களைப் பற்றி திட்டமிடுவீர்கள். வேலைவாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சற்று காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். வியாபாரம் செய்பவர்கள் பொருளாதார பற்றாக்குறையை சமாளிக்க வேண்டிய நிலையில் இருப்பீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு கடன் பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து மறையும். அம்பிகையை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

ரிஷபம்:
Rishabam Rasi

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உங்களது கனிவான பேச்சால் பலரின் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள். பூர்வீக சொத்துகளை பற்றிய சிந்தனையில் இருப்பீர்கள். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவோடு புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரம் செய்பவர்கள் வியாபார விருத்திக்காக புதிய மாற்றங்களை செய்வதன் மூலம் வெற்றியை காணலாம். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடாத நண்பர்களின் சேர்க்கையால் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபத்தை விடுத்து பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. பைரவரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் தரும் நாளாக இருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். சகோதர சகோதரிகளின் வழியே ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக கடுகடுப்புடன் காணப்படுவீர்கள். பொறுமையை கையாள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் மூலம் நன்மைகள் நடக்கும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கிய குறைபாடுகள் அவ்வபோது தோன்றி மறையும். கணவன் மனைவியிடையே சுமூகமான சூழ்நிலை நிலவும். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நாளாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து சில நல்ல தகவல்கள் வந்து சேரும். உயர்கல்வி படித்துக் கொண்டிருப்பவர்கள் கல்வி விஷயமாக சில அலைச்சல்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். பொருளாதார பற்றாக்குறை மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நாளாக இருக்கும். ஒருசிலருக்கு தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை நிலவும். பயணங்களால் ஆதாயம் உண்டு என்பதால் தைரியமாக பயணத்தை தொடரலாம். வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு இருப்பவர்கள் சாதகமான சூழ்நிலையில் காணப்படுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சில பிரச்சினைகள் குழப்பங்கள் ஏற்படக்கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக சில கடன்களை வாங்க வேண்டி வரலாம். ஆடம்பர செலவுகளை தவிர்த்து கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடு படிப்படியாக நீங்கும். இறை வழிபாடுகளின் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

கன்னி:
Kanni Rasi

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரக்கூடிய ஒரு இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேருவதற்கான சாதகமான சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதியுடன் காணப்படுவீர்கள். சக பணியாளர்களிடத்தில் நட்பு பாராட்டுவது நல்லது. குடும்பத்தில் உள்ள நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது இன்றைய நாளை சீராக்கிக் கொள்ளலாம். கூட்டுத் தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உறவினர்களால் சில வழக்குகள் வரக்கூடும் எனவே கவனமாக இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கவேண்டிய தருணத்தில் சரியாக கிடைக்கப்பெறும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் ஒரு நாளாக இருக்கும். வாகன வகையில் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். சுயதொழில் புரிபவர்கள் லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் நீங்கி மன நிம்மதி கிட்டும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சுபவிரயங்கள் நடப்பதற்கான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். மாணவர்கள் சரஸ்வதி தேவியை வழிபடுவதன் மூலம் பலன் காணலாம். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். சமுதாய அக்கறையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் அனுசரணையாக பேசுவது நல்ல பலனை தரும். வழக்கு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒரு நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் வழக்கத்தை விட அதிக வேலையை இழுத்துப் போட்டு செய்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான ஒரு நாளாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான திட்டமிடலில் இருப்பீர்கள். மூன்றாம் நபர்களால் குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். எதிர்பாராத உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு கொண்டிருந்த சில விஷயங்கள் நல்லபடியாக நடக்கும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரை வழிபடுவது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வெற்றி காண்பீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியே ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும். உத்தியோகத்திலிருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நண்பர்களின் மூலம் விருத்தி ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அதனை ஏற்பதன் மூலம் முன்னேற்றம் காணலாம். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தெரியாத விஷயங்களை நண்பர்களின் மூலம் கற்று தேர்வீர்கள். அரசு வழியில் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

மகரம்:
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று சாதனை புரியும் ஒரு இனிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சுமுகமான சூழ்நிலையை காண்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சகோதர, சகோதரி வழியே தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாக பெறும். பயணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வாகன வகையில் சில செலவுகள் வந்து சேரும். மனதுக்குப் பிடித்தவர்கள் மூலம் நல்ல தகவல் கிட்டும். மாரியம்மனை மனதார நினைத்து வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரக்கூடிய ஒரு இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார பற்றாக்குறைகள் நீங்கும். சுயதொழில் புரியும் பெண்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விருத்தி காணப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு காலதாமதம் ஏற்படக்கூடும். தேவையற்ற அலைச்சல்களை தவிர்ப்பதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கி கொள்ளலாம்.

மீனம்:
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். அர்த்தமற்ற பேச்சுகளால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே கவனமாக இருப்பது நல்லது. மிகவும் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய ஒரு நாளாக இருக்கும். உத்தியோகம் செய்பவர்களுக்கு ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் ஏற்படக்கூடும். வியாபாரம் விருத்தி பெறும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாடு வேலைவாய்ப்பை எதிர்நோக்குபவர்களுக்கு தாமதம் ஏற்படக்கூடும். வழக்கு தொடர்பான விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அரசு தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். கிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.