இன்றைய ராசிபலன் 05-03-2020

rasi palan - 5-3-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக அமைய போகிறது. உங்களது பேச்சு மற்றவர்களை திரும்பி பார்க்கும் அளவிற்கு சாதுரியமாக இருக்கும். இன்று அனைவரின் பாராட்டையும் பெற போகிறீர்கள். புதிய முயற்சிகளுக்கு உங்கள் மனைவி ஆதரவாக இருப்பார்கள். உங்களுடைய சுய தொழிலில் முன்னேற்றத்தின் ரகசியத்தை அடுத்தவர்கள் கேட்கும் அளவிற்கு திறமையாக செயல்படுவீர்கள். அலுவலக பணியில் சுமுகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் நாளாக அமைய போகிறது. அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் விவாதம் செய்வதால் பிரச்சனைகள் மேலோங்கும். பயணத்தின் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.  பணவரவு சீராக இருக்கும். செலவை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. முக்கியமான முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. முடிவு எடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பெரியோர்களின் ஆலோசனைப்படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலக வேலை சுமுகமாக செல்லும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் திருப்பம் ஏற்படும் நாளாக அமைய போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் உங்களது சாதுரியத்தால் சுலபமாக முடித்து விடுவீர்கள். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த ஒரு பிரச்சனை இன்று முடிவுக்கு வரும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமைய போகிறது. பேச்சில் அதிகம் கவனம் தேவை. முடிந்தவரை மௌனத்தையே பதிலாக கூறுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மன தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்களது முன்னேற்றத்தில் உங்களுடன் இருவரையும் சேர்த்துக் கொள்ளும் பக்குவம் உங்களிடம் உண்டு. பணவரவு சீராக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பணியில் சுமூகமான சூழ்நிலை நிலவும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் வரவு மிக்க நாளாக அமைய போகிறது. நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகை இன்று வந்து சேர அதிக வாய்ப்பு உண்டு. வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் ஏற்படலாம். அலுவலக பணியின் உற்சாகமாக செயல்படுவீர்கள். உடன் பணிபுரிபவர்களிடம் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிப்பது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது சற்று கவனம் தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்கள் இன்று செலவினை குறைத்து கொள்ள வேண்டும். பணம் பற்றாக்குறையாக இருக்கும். உடல் உபாதைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. அரசு பணியில் இழுபறியில் இருந்த வேலை, இன்று சுமூகமாக முடியும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்த தொழில் சற்று மந்தமாகத்தான் செல்லும். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் எடுத்து படிப்பது அவசியம்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு அதிகரிக்கக்கூடிய நாளாக அமைய போகிறது. மாணவர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் அக்கறை காட்டுவது நல்லது. எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும் பலமுறை யோசித்து ஏற்பது நல்லது அவசரம் வேண்டாம். பெண்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி வர வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. அலுவலகப் பணி சுமுகமாக செல்லும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிகாரர்களுக்கு இன்று எதிர்பாராத பணவரவு மூலம் மகிழ்ச்சி அடையக் கூடிய நாளாக அமைய போகிறது. உங்களது பேச்சு திறமையால் சொந்த தொழிலானது நல்ல முன்னேற்றத்தை அடைய போகிறது. அலுவலகத்தில் பணியில் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக செல்லும். கடுமையான முயற்சி வெற்றியை தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை. நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து விவகாரம் இன்று ஒரு முடிவுக்கு வரலாம்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் சற்று சுமாரான நாளாகத்தான் அமையப்போகிறது. உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உண்டு. சொந்த தொழிலில் அதிக முயற்சி செய்தால் தான் நல்ல லாபத்தைப் பார்க்க முடியும். அலுவலகப் பணி எப்போதும் போல் செல்லும். நீங்கள் எடுத்த முயற்சியில் உடனடியாக வெற்றி அடைய முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும். கவலை வேண்டாம். கூடியவிரைவில் வெற்றி உங்களை தேடி வரப்போகிறது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிப்பது முன்னேற்றத்தை தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்று யோகமான நாளாக அமைய போகிறது. பணவரவு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வரும். வீண் செலவும் ஏற்படும். வீட்டின் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி நிலவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. கோவிலுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி ஏற்படும். உங்களது வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் செய்யும் வேலையில் அதிக ஆர்வம் தேவை. அலட்சியமாக வேலை செய்தால் பிரச்சனையாகிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் பெருக கூடிய நாளாக அமைய போகிறது. எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் உங்களுடைய வேலைகளை முடித்துவிடவேண்டும் என்று ஆர்வத்தோடு செயல்படுவீர்கள். அலுவலகத்தில் இருக்கும் மேலதிகாரிகளிடம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருந்தாலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாகனத்தில் செல்லும் போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.