இன்றைய ராசிபலன் 06-03-2020

rasi palan - 6-3-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷராசிக்காரர்களுக்கு இன்று மிகச் சிறப்பான நாளாக அமைய போகிறது. நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி எதுவாக இருந்தாலும் வெற்றி தான். புகழின் உச்சிக்கே செல்லும் வாய்ப்பும் உள்ளது. உங்களது பிள்ளைகளை கவனமாக கண்காணித்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனை நல்ல முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகப் பணி வழக்கம்போல் செல்லும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சற்று மந்தமான நாளாகத்தான் அமையப்போகிறது. சொந்தத் தொழில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. எப்படியும் சமாளித்து விடலாம் என்ற மன தைரியம் உங்களிடம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் கவனத்தோடு செயல்படுவது நல்லது. சக மாணவர்களை அனுசரித்துச் சென்றால் பிரச்சினை வராது. அலுவலகப் பணியில் உடன் வேலை செய்பவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் விவாதத்தை குறைத்துக் கொள்ளலாம்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாளாக அமைய போகிறது. உறவினர்களின் வருகையால் குடும்பம் சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும். பணவரவு சீராக இருக்கும். சுபச் செலவு ஏற்படும். சொந்தத் தொழில் சற்று மந்தமான சூழ்நிலை நிலவும். அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு சற்று சோம்பேறித்தனம் ஏற்படும். பிரச்சனைகளுக்கு வாய்ப்பில்லை. சிலர் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிகரமான நாளாக அமைய போகிறது. நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் முன்னேற்றத்துடன் இருக்கும். அனாவசிய பேச்சை மட்டும் குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் எடுத்து படிப்பது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். திருமணம் போன்ற சுப பேச்சுக்கலை தொடங்கலாம்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமைய போகிறது. அலுவலகப் பணியில் நல்ல பெயர் கிடைக்க அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சொந்த தொழிலில் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். பணத்தை யாரிடமும் கடனாக வாங்க வேண்டாம். கடனாகவும் கொடுக்க வேண்டாம் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று இனிமையான நாளாக அமைய போகிறது. அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் பணிவாக நடந்து கொள்வது நல்ல பெயரை வாங்கித் தரும். சொந்தத் தொழில் பங்குதாரர்களிடம் உஷாராக இருப்பது நல்லது. எந்த முடிவையும் ஊர்ஜிதம் எடுக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். அவசரம் வேண்டாம். சற்று சிந்தித்து பொறுமையாக செயல்படுவது நன்மை தரும். பணவரவு எப்பவும் போல் சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமைய போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பாராத பணவரவு உங்கள் கைக்கு வர வாய்ப்பு உள்ளது. மனைவி வழி உறவினர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் வாங்கும் யோகமும் அமையும். அடுத்தவர்களை எந்த விஷயத்திலும் முழுமையாக நம்ப வேண்டாம். நம்பி ஏமாற வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. மொத்தத்தில் இன்று தொட்ட காரியம் அனைத்தும் வெற்றி தான்.

விருச்சிகம்:
virichigam
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகிறது. வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து நீங்கும். வாக்குவாதம் வேண்டாம். அமைதியாக செல்வது நல்லது. குடும்பத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சொந்தத் தொழில் எப்போதும் போல் செல்லும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். புதிய முதலீடு செய்ய வேண்டாம். அலுவலகப் பணியில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்தோடு படிப்பது நல்லது. உங்களது பிள்ளைகளின் செயல்பட்டால் மன நிறைவு அடைவீர்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது. வருமானம் அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும்கூட அதை உங்களது சாதுரியத்தால் சுலபமாக முடித்து வெற்றி காண்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். அடுத்தவர்களின் உதவி, நீங்கள் கேட்காமலேயே இன்றைக்கு உங்களுக்கு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. மொத்தத்தில் உற்சாகமாக இருக்க கூடிய நாளாக இது அமையப் போகிறது. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக அமைய போகிறது. உதவி பெற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மனநிறைவு அடைவீர்கள். முடிந்தவரை பெண்கள் உங்கள் வீட்டு ரகசியங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இதன்மூலம் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. இன்றைய வருமானம் நாளைக்கும் தேவை என்று எடுத்து வைப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழில் தைரியத்தோடு சில முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலுவலகப் பணி சுமூகமாக முடியும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்று நன்மை தரக்கூடிய நாளாக அமைய போகிறது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனை நீங்கி நெருக்கம் உண்டாகும். எந்த செயலிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். அலுவலக பணியில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். சோம்பேறித்தனத்தை தவிர்த்து வேலையில் அக்கறை காட்டுவது நல்லது. உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். திருடு போக வாய்ப்பு உள்ளது.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமைய போகிறது. கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொண்டால் போதும். உறவினர்களின் வருகையால் பிரச்சினை ஏற்படலாம். வீண் விவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நன்மை தரும். சொந்தத் தொழிலில் அதிக முயற்சி செய்தாலும் அளவான லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் எடுப்பது கஷ்டம்தான். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நிதானத்தோடு செயல்பட்டால் இந்த நாள் நல்ல நாளாக அமையும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.