இன்றைய ராசி பலன் – 6-06-2021

rasi palan - 6-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கக் கூடிய மன உறுதி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறும். பொருட் தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான மாற்றங்கள் ஏற்படும். திருமண முயற்சிகளை செய்தால் வெற்றி அடையலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உற்சாகமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகள் மற்றவர்கள் பாராட்டும் படியாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இழுபறியில் இருந்த சில விஷயங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தயாள குணம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீது அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய விஷயங்களில் ஈடுபடும் பொழுது யோசித்து செயலாற்றுவது நல்லது. மனஅமைதி ஏற்பட விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும் இதனால் டென்ஷன் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் வாக்குவாதங்களை தவிர்த்து ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது நல்லது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய எளிமையான நடவடிக்கைகளால் முன்னேற்றத்தை காணலாம். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரத்து சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்யத் துணிவார்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு இருக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதே நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடிப்பதில் போராட்டம் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் மேலதிகாரிகள் கொடுப்பார்கள் எனினும் அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும். கணவன் மனைவியிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருந்த பயங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மூத்த சகோதரர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் வரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை எளிதாக செய்யக்கூடிய வகையில் அமைப்பு உள்ளது. உத்யோகத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அனுசரித்து செல்வது உத்தமம். உங்களுக்கான சூழ்நிலை வரும் வரை பொறுத்திருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பகைவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். கடன் ரீதியான பிரச்சனைகள் தவிர்க்க ஆடம்பரத்தை குறைத்துக் கொள்வது நல்லது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவைப்படக் கூடிய நாளாக இருக்கும். மனைவிவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெற்றோர்களின் ஆலோசனை கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லோரும் பாராட்டும் வகையிலான அமைப்பு உள்ளது. தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திடீர் எதிர்ப்புகளை சமாளிக்கக்கூடிய நிலை வரலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணத்தில் எச்சரிக்கை தேவை.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையான சமயத்தில் தேவையானவர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களை எதிர்த்தவர்கள் விலகி சென்று விடுவார்கள். உத்யோகத்தில் உங்களுடைய முயற்சிகள் காலதாமதமான பலன்களை தரும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

- Advertisement -