இன்றைய ராசிபலன் (7 நவம்பர் 2021)

rasi palan 7/11/2021
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள் நீடிக்க வாய்ப்புகள் உள்ளதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புத்திசாலித்தனமாக யோசித்து சில விஷயங்களை செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆன்மீக சிந்தனை மேம்பட்டு காணப்படும். கோபத்தை தவிர்க்கவும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் தனலாபம் கிடைக்கும். குடும்பத்தினருடன் செலவு செய்யக் கூடிய அற்புத வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் எதிர்பார்க்கும் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பணத்தை கையாளுவீர்கள்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சமூகத்தில் உங்களுடைய அந்தஸ்து அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலைக்கு ஏற்ற சன்மானம் கிடைக்கும். மற்றவர்களை அனுசரித்து சாதுரியமாக நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்த்து விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பணவரவு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருக்கும் ஆசைகள் நிறைவேற வாய்ப்புகள் அமையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்கள் போட்டியாளர்களை சமாளிக்க தைரியத்துடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய ஆலோசனையை கேட்டு முடிவு எடுப்பது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறப் போகும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய போட்டிகளில் அடி எடுத்து வைக்க சந்தர்ப்பங்கள் அமையும். உங்கள் திறமைக்கு உரிய சவாலை சந்திக்கும் வாய்ப்புகள் பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புன்னகையுடன் செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம் என்பதால் கூடுமானவரை ஆடம்பரத்தை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மிகப் பெரிய வேலைகளை கூட சுலபமாக செய்துவிடக் கூடிய அமைப்பு உள்ளது. குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் தேவையற்ற கோபத்தை தவிர்த்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை சமயோசிதமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் போட்டியாளர்களை வெற்றி காணும் யோகம் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் தனித்துவமான அடையாளத்தை நிலை நாட்டி வெற்றி பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்கள் நண்பர்களுடைய ஆதரவை பெறுவீர்கள். புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்ளும் எண்ணத்தில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சோம்பலுடன் காணப்படுவீர்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நேர்மறையான சூழல் இருப்பதால் நீங்கள் எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் காட்சி அளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவு சறுக்கல்கள் வந்தாலும் நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுறுசுறுப்புடன் செயலாற்ற கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் நேர்மை, நாணயத்திற்கு உரிய பலன்களை காணும் யோகம் உண்டு. வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உங்கள் கவலைகளை மறந்து உத்வேகத்துடன் செயல்பட கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற மன குழப்பம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.

- Advertisement -