இன்றைய ராசிபலன் 07-03-2020

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கக்கூடிய நாளாக அமைய போகிறது. சொந்த தொழிலில் திறமையாக ஈடுபட்டு அதிக லாபத்தைப் பெறுவீர்கள். அலுவலகப் பணி நல்ல முன்னேற்றத்தில் செல்லும். கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணவரவு உங்கள் கைகளுக்கு வந்து சேரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வம்பு சண்டைக்கு செல்லாமல், பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நன்மை தரும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றத்தை தரக்கூடிய நாளாக அமைய போகிறது. பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வதன் மூலம் சந்தோஷமான மன அமைதியை பெறலாம். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தத் தொழில் சிறப்பாக நடக்கும். அலுவலக பணியில் திறமையாக செயல்பட்டு நல்ல பெயரை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகிறது. சொந்தத் தொழிலில் அவசர முடிவு எடுக்காமல் இருப்பது நன்மை தரும். அலுவலகப் பணியில் உடன் இருப்பவரை அனுசரித்து சென்றால் நன்மை கிடைக்கும். சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகத்தான் செய்யும். கோபப்படாமல் சமாளிப்பது உங்கள் பொறுப்பு. பணவரவு எப்பவும் போல் சீராக இருக்கும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிப்பது முன்னேற்றத்தை தரும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் இன்று தைரியத்தோடு எந்த காரியத்திலும் செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குக் கூட ஒரு முடிவினை இன்று எடுத்து விடுவீர்கள். வாக்குவன்மை அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்துடன் செல்லும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம், பிரச்சனையை தைரியமாக பேசும் அளவிற்கு தெம்பு வந்துவிடும். பணவரவு சீராக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கோபத்தை மட்டும் சற்று குறைத்துக் கொள்வது நன்மை தரும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்கள் இன்று எடுத்த காரியத்தை வெற்றியோடு தான் முடிக்கப் போகிறீர்கள். சொந்தத் தொழிலில் ஏற்படும் இடையூறுகளை, சுலபமாக சமாளித்து லாபத்தை அடைந்து விடுவீர்கள். அலுவலகப் பணியில் சற்று சிரமம் ஏற்படும். உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டியது அவசியம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகிறது. முக்கியமான முடிவுகளை மட்டும் இன்று எடுக்க வேண்டாம். எடுத்தே ஆகவேண்டும் என்ற அவசியம் இருந்தால் ஒன்றுக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மருத்துவ செலவு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகப் பணியில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சொந்தத் தொழில் எப்பவும் போல் சீராக செல்லும். இறைவழிபாடு அவசியம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து படிப்பது நன்மை.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது. பண வரவு சீராக இருக்கும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் சந்தோஷம் நிலவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். மனநிறைவுடன் வேலை செய்கிறீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. அலைச்சல். மட்டும் சற்று அதிகமாக இருக்கும் ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமைய போகிறது. அனாவசியமாக அடுத்தவர்களின் பிரச்சினையில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் விவாதத்தை தவிர்த்துக் கொள்ளவும். வியாபாரத்தில் அதிக அளவு போட்டி நிலவும். உடன் பணிபுரிபவர்களிடம் உஷாராக பேசி பழகுங்கள். உங்களிடம் நன்றாக பழகுபவர்கள், உங்கள் பின்னால் குழி தோண்ட வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்கும். எப்படிப்பட்ட பிரச்சினையில் மாட்டிக் கொண்டாலும் அதிலிருந்து விடுபட பாருங்கள். கோபப்பட வேண்டாம்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. உங்களது உறவினர்களால் உதவி பெற்று பயனடைவீர்கள். பணவரவு சீராக இருக்கும். சுப பேச்சுக்களை தொடங்கலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்-மனைவிக்கிடையே சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சொந்த தொழில் சீராக செல்லும். அலுவலக பணியில் திறமையாக செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள். வாகனத்தில் செல்லும் சமயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய போகிறது. யாரிடமும் அனாவசியமாக முன்கோபம் கொள்ளாதீர்கள். நண்பர்களுடன் பழகி பேசும்போது உஷாராக இருப்பது நல்லது. தேவையற்ற விவாதங்களில் ஈடுபடவேண்டாம். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழில் சுமுகமாக செல்லும். அலுவலகப் பணியில் சின்னசின்ன சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதானத்தோடு செயல்படுவது வெற்றியை தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமைய போகிறது. நீங்கள் எதிர்பாராத பணவரவு உங்கள் வாசல் கதவை தட்டும். மகிழ்ச்சியில் திக்குமுக்காட போகிறீர்கள். உங்களுடைய பேச்சுக்கு, உங்கள் சுற்றத்தினர் மரியாதை கொடுப்பார்கள். சொந்த தொழில் நல்ல முன்னேற்றத்துடன் செல்லும். அலுவலக பணியில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனம் தேவை. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் படித்தால் மட்டுமே நல்ல முன்னேற்றமும் கிடைக்கும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக அமைய போகிறது. நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு வந்து சேரும். மனத்திருப்தி அடைவீர்கள். அதற்கேற்ற செலவுகளும் பின்தொடரும். வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். அலுவலகப் பணியில் எவ்வளவுதான் வேலை செய்தாலும் மேலதிகாரியை திருப்திப்படுத்த முடியாது. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போகும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.