இன்றைய ராசிபலன் (8 நவம்பர் 2021)

rasi palan 8/11/2021
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கக்கூடிய நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியா கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து நிற்கக் கூடிய தைரியம் பிறக்கும் அற்ப்புத நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொட்டது துலங்கும் நல்ல நாளாகும். வரவுக்கு மீறிய பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக அக்கறை இருக்கும்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்கள் உண்டாகும் அற்புதமான நாளாக இருக்கும். சுபகாரியத் தடைகள் விலகி பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு லாபத்திற்கு ஏற்ப நஷ்டமும் வரும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளை போகிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நவீன உபகரணங்களை வாங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியிட பயணங்கள் மூலம் அனுகூல பலன் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் அனுகூலப் பலன்கள் உண்டாகும் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தந்தைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் விமர்சனங்களை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்கள் உண்டாகும். உங்கள் புதிய முயற்சிகளுக்கு மற்றவர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சாதுரியமான நடவடிக்கைகள் மூலம் முன்னேற்றப் பாதை இருக்கும். புதிய உக்திகள் லாபம் தரும். உத்யோகத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சில விஷயங்களுக்கு எதிர்மறையான பலன்கள் உண்டாகலாம்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சாதாரண வேலைகளை கூட கஷ்டப்பட்டு முடிக்க வேண்டியிருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் குறையும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சாதாரண வேலைகளை கூட சுலபமாக செய்வீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் போகிறது. வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் உண்டாகும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேவையற்ற நபர்களை நம்பி எந்த ஒரு முக்கிய பொறுப்புகளையும் ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் பாராட்டுகள் பெறுவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டாகும்.

- Advertisement -