இன்றைய ராசி பலன் – 9-06-2021

rasi palan - 9-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகத்துடன் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி தரும். உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையற்ற வீண் விரயங்களை கொடுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமை தேவை. குடும்பத்தில் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் மன அமைதி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பங்குதாரர்களை அனுசரித்துச் சென்றால் ஏற்றம் பெறலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு மேலும் வலுவாக என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் உங்களுடைய தேவை அறிந்து செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் கூடுதல் உழைப்பே செலுத்த வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படுவதால் சோர்வுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் குழப்பங்கள் தீரக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். உற்றார் உறவினர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் வகையில் அமையும். தொலை தூர இடங்களிலிருந்து மனக்கசப்பை ஏற்படுத்தும் செய்திகள் வரலாம். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மன அமைதி இருக்கும். சுய தொழில் மூலம் லாபம் உண்டாகும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களின் மதித்து நடப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பாராத போட்டிகளில் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் உடைய வாக்குவன்மை பலிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் ஓரளவுக்கு பிரச்சனை குறையும். ஆரோக்கியம் மேம்பட கவனம் தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலத்தை அறிந்து செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இடையூறுகள் ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவை.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பணவரவு மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அடுத்தவர்களை பொறாமைப்படும் அளவிற்கு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார ஏற்ற இறக்கங்களையும் சமாளிக்க போராட செய்வீர்கள். உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நட்பு வட்டம் விரியும். புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்த சில விஷயங்களை செய்வீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்த சிந்தனை மேலோங்கி காணப்படும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய அணுகுமுறை முன்னேற்றத்தை கொடுக்கும். கணவன் மனைவி உறவில் இருக்கும் சிக்கல்கள் தீரும். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை செலுத்துங்கள்.

- Advertisement -