மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் டாப் 5 ராசிகள்! லட்சியத்தை அடைய எதையும் செய்வார்களா?

rolemodel-astro

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நபர்கள் தங்களுக்கான ரோல் மாடலாக திகழ்வார்கள். பெரும்பான்மையோர் அவர்களை போல் நாம் இருக்க வேண்டும்! இவர்களைப் போல் நாம் இருக்க வேண்டும்! என்று தான் நினைப்பார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் தான் நாம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கம்பீரமாக திரியும் டாப் 5 ராசிகள் யாரெல்லாம்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்:
Mesham Rasi
12 ராசிகளில் முதன்மையாக இருக்கும் இவர்கள் எதிலும் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். மேஷ ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனித் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் திறன் தெரிய ஆரம்பிக்கும் பொழுது சுற்றி இருப்பவர்கள் அனைவருமே இவர்களை வியப்பாக பார்க்கும்படி உயரத்திற்கு செல்வார்கள். இவனா இப்படி? நேற்றுவரை எப்படி இருந்தான்? இன்று இப்படி ஆகிவிட்டானே! என்று வாயைப் பிளப்பார்கள். உங்களுக்கான நேரம் வரும் வரை நீங்கள் உங்கள் ரகசியங்களை கட்டிக் காப்பதிலும் வல்லவர்கள் தான்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்கள் தாங்கள் கொண்ட லட்சியத்திற்காக எதையும் செய்ய தயக்கம் காட்டுவதில்லை. எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் இரும்பு இதயத்துடன் தாங்கிக் கொண்டு தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பார்கள். சுற்றியிருக்கும் எதுவும் இவர்களுடைய கண்களுக்கு தெரிவது இல்லை. குதிரைக்கு கடிவாளம் போட்டது போல லட்சியத்தை நோக்கி மட்டுமே பயணிப்பதால் இவர்களுடைய வெற்றி எளிதில் கிடைக்கிறது.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்கள் எப்பொழுதும் தனித்தன்மையுடன் செயல்படுபவர்கள். இவர்களுடைய அறிவாற்றல் அனைவரும் பாராட்டும் படி ஆனதாக இருக்கும். விருச்சிக ராசியில் பிறந்த கல்வியில் குறைந்தவர்களும் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று தங்களைத் தாங்களே நிறைய விஷயங்களில் ஈடுபடுத்திக் கொண்டு மேலும் மேலும் மெருகேற்றிக் கொள்பவர்கள்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயங்களிலும் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். புதிய புதிய விஷயங்களை படைக்கும் ஆற்றல் பெற்ற படைப்பாளர்களாகவும் திகழ்வார்கள். முன் வைத்த காலை இவர்கள் ஒரு பொழுதும் பின் வைப்பது இல்லை. ஒரு வேலையை செய்ய பல முறை யோசிப்பார்கள். ஆனால் செய்ய ஆரம்பித்து விட்டால் அதில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். லட்சியத்தை அடைவதில் பிடிவாதத்துடன் போராடுவார்கள். எல்லோரும் ஒரு வழியில் செல்லும் பொழுது, இவர்கள் மட்டும் தனி வழியில் சென்று தங்களை மற்றவர்கள் முன்னிலையில் வித்தியாசப்படுத்திக் கொள்வார்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்கள் எப்பொழுதும் ஆக்கபூர்வமாக செயல்படுபவர்கள். தேவையில்லாமல் அதிகம் பேசமாட்டார்கள். தங்களுக்கு என ஒரு பாதையை வகுத்துக் கொண்டு அதன்படி நடப்பவர்கள். மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும் தன் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ! அதை மட்டுமே இவர்கள் செய்வார்கள். எவ்வளவு சிக்கலான வேலைகளை கூட சுலபமாக தீர்த்து முடித்து விடுவார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள். சிறு வயதினராக இருந்தாலும் மிகப் பெரிய வேலைகளை செய்து மற்றவர்களை அண்ணாந்து பார்க்க வைப்பார்கள். தங்கள் மேல் தங்களுக்கு அதிக நம்பிக்கை கொண்டு இருப்பார்கள். நம்மை நாம் நம்பும் போது தான் மற்றவர்களும் நம்மை நம்புவார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இவர்கள். இதனால் எப்பொழுதும் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருப்பார்கள்.