DTH : கேபிள் சேனல்களின் கட்டண அதிகரிப்பால் DTH-ல் கிடைக்கப்பட உள்ள சலுகைகள் – முழுவிவரம் இதோ

Dth (2)
- Advertisement -

இந்தியா முழுவதும் தற்போது கேபிள் சேனல்கள் கட்டண அதிகரிப்பை கொண்டுவந்துள்ளன. மேலும், ஒவ்வொரு தொலைக்காட்சிக்கு தனித்தனியே கட்டணத்தை செலுத்தி பார்க்கும் முறையும் மார்ச் மாத இறுதியில் வரப்போகிறது. இதன் காரணமாக TRAI அமைப்பு இந்த கட்டண முறையினை சரிசெய்யும் விதமாக DTH நிறுவனங்களின் கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

Dth 1

அதன்படி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து DTH கம்பெனிகளுக்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கட்டண சலுகைகளை அறிவித்து மேலும், வாடிக்கையாளர்களை அதிகம் நலன் பெற DTH சேவை கட்டணத்தை முறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

இதன்மூலம் DTH வாடிக்கையாளர்களுக்கு அடுத்த மாதத்திலிருந்து பல அதிரடி கட்டண குறைப்பு அறிக்கை வெளியாகும் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே ஏர்டெல் மற்றும் டாடா ஸ்கை போன்ற DTH நிறுவனங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட DTH ஒரே வீட்டில் இருந்தால் அவர்களுக்கு 59 ரூபாய் திட்டத்தினை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது TRAI அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையினால் மேலும் பல புதிய சலுகைகள் மற்றும் கட்டண குறைப்பு ஆகியவை இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. அதனால் கேபிள் செனல்களிடம் இருந்து DTHக்கு மாறுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அவர்களுக்கு எளிமையான மாத சந்தாவும் கிடைக்கும்.

- Advertisement -