முயற்சிகள் அனைத்தையும் வெற்றியாக மாற்றும் கணபதி மந்திரம்

Pillayar

ஆசைகள் தான் அனைத்து துன்பங்களுக்கு காரணம் என்பது நிதர்சனமான உண்மை. இது வாழ்வில் எல்லாவற்றையும் நன்கு அனுபவித்து சலித்துப்போன பின்பு வரவேண்டிய ஒரு ஞானானுபவமாகும். ஆனால் பேராசை படாமல் தங்களின் சிறிய அளவிலான சந்தோஷங்களை அனுபவிக்க விரும்பும் எளிமையான நிலையில் வாழும் மக்கள், அவர்கள் வேண்டியதை பெற ஆசை படுவதில் தவறில்லை. அதற்கு அவர்கள் முயற்சிக்கும் போது இறைவனின் அருளாசியும் வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்கு வெற்றியை தரும் உச்சிஷ்ட கணபதியின் மந்திரம் இது.

Vinayagar

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய
ஹஸ்தி முகாய,லம்போதராய
உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம்
கம் கேகே ஸ்வாஹா

மிகுந்த ஆற்றல் வாய்ந்த இந்த உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை வாரத்தின் எந்த நாளிலும் எந்த நேரத்திலும் கூறி வழிபடலாம் என்றாலும் மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று மாலை 5 லிருந்து 6 மணிக்குள்ளாக, வீட்டில் இருக்கும் கணபதி படத்திற்கு பூக்களை சாற்றி, தூபங்கள் கொளுத்தி, கொழுக்கட்டை அல்லது லட்டு இனிப்புகளை நிவேதனம் வைத்து, விநாயகருக்கு நேராக அமர்ந்து கொண்டு இம்மந்திரத்தை 108 அல்லது 1008 முறை கூறி வழிபட வேண்டும். பின்பு நைவேத்திய இனிப்புகளை நீங்களும் உங்களை சார்ந்தவரும் உண்ண வேண்டும். இதனால் உங்கள் வாழ்வில் நீங்கள் விரும்பிய ஒவ்வொன்றும் உங்களுக்கு கிடைக்க தொடங்கும். கணவன் மனைவிக்கு இடையே ஆனா ஒற்றுமை ஓங்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவர். கண் திருஷ்டி நீங்கும். நோய்கள் அகலும். இந்த மந்திரத்தை 16000 உரு ஜெபித்து சித்தி செய்வதால் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

நமது மதம் மற்றும் கலாச்சாரத்தில் எந்த ஒரு விடயத்தையும் தொடங்கும் முன்பு அது சிறப்பாக நடந்து முடிய இறைவனுக்கு பூஜைகள் செய்து வணங்கி அக்காரியத்தை சிறப்பான முறையில் செய்ய தொடங்குவது மிக நெடுங்காலமாக இருந்து கடைபிடிக்கப்படும் வழக்கமாகும். மானிடர்களாகிய நமக்கு தெரிந்த உலகத்தில் அப்படி எல்லாவற்றிற்கும் முழு முதல் நாயகனாகிய கணபதி அல்லது விநாயக பெருமானையே நாம் முதல் கடவுளாக வழிபடுகிறோம். மனிதர்களாகிய நாம் மட்டுமல்ல வானுலகில் வாழும் தேவர்களும் தங்களின் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றியடைய அனைத்து லோகங்களுக்கும் நாயகனாகிய கணபதியையே வழிபடுகின்றனர்.

vinayagar

அதிலும் உச்சிஷ்ட கணபதியை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த கணபதி பெரும்பாலும் கோவில்களிலும், வீடுகளிலும் செய்யப்படும் ஹோமங்களில் ஆவாஹனம் செய்யப்பட்டு வழிபடப்படுகிறார். ஒருவரின் குறைகளையும், குற்றங்களையும் பெரிது படுத்தாமல் அவரிடம் தூய்மையான பக்தி மட்டும் இருக்கும் பட்சத்தில் அவரை மன்னித்து அவருக்கு நன்மையளிக்கும் குணம் கொண்டவர் உச்சிஷ்ட கணபதி. அவரை இம்மந்திரம் சொல்லி வழிபடுவது சிறப்பானதாகும்.

இதையும் படிக்கலாமே:
வினைகள் தீர்க்கும் வீரபத்திரர் மந்திரம்

English Overivew:
Here we have Ucchista ganapati manthiram or Ucchista ganapati mantra in Tamil. we discussed about Ucchista ganapati mantra benefits in Tamil and also how to chant Ucchista ganapati mantra.