நீண்ட நாட்களாக தீராமல் தொல்லை கொடுத்து வரும் நோய் கூட 48 நாட்களில் தீரும். அம்மனுக்கு தினமும் இந்த 2 பொருளை கொண்டு அர்ச்சனை செய்தால்.

amman-neem-tree

நீண்ட நாட்களாக மருத்துவரிடம் சென்று, சிகிச்சை எடுத்து மருந்து சாப்பிட்டு வந்தாலும், சில உடல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது. இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய உடல் உபாதைகளை தீர்த்துக்கொள்ள ஆன்மீக ரீதியாக அம்மன் வழிபாட்டை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடல் ரீதியாக பிரச்சினை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம். அல்லது தன்னுடைய கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன், தன்னுடைய குழந்தைகளுக்காக தாய் தந்தையர் இந்த பரிகாரத்தை செய்தும் பலனைப் பெறலாம்.

arali

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு அரளி பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய எந்த அம்மன் படமாக இருந்தாலும் சரி, அந்த அம்மனை துர்க்கையம்மன் ஆக பாவித்து ‘ஓம் துர்கா தேவியே போற்றி’ என்ற மந்திரத்தை உச்சரித்து அரளிப் புஷ்பங்களால் அர்ச்சனை செய்து வந்தால் உடல் உபாதைகள் தீருமென்று சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிரி தொல்லையும் நீங்கும். இது ஒரு வழி.

இரண்டாவதாக, இந்த அரளிப்புஷ்பத்தோடு, கொஞ்சமாக வேப்பிலையை கலந்து, உங்கள் வீட்டில் இருக்கும் அம்மன் படங்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் வேப்பிலையையும் அரளிப்பூவை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். அம்மனின் திருவுருவ படத்திற்கு முன்பு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு, நீங்கள் ஒரு மரப்பலகை மீது அல்லது பாயின் மீது அமர்ந்து கொள்ளுங்கள்.

veppilai-water

அம்மனுக்கு இந்த அருளிப் புஷ்ப தோடு சேர்ந்த வேப்பிலையை ஒன்றாக சேர்த்து எடுத்து போட்டு ‘ஓம் சக்தி’ என்ற மந்திரத்தை உச்சரித்து 108 முறை அர்ச்சனை செய்யலாம். தொடர்ந்து 108 நாட்கள் இந்த அர்ச்சனையை அம்மனுக்கு செய்து வந்தால் தீராத வியாதி கூட, படிப்படியாக குறைந்து கொண்டே வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் மருத்துவரையும் அணுக வேண்டும். மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதையும் நிறுத்தக் கூடாது. மருத்துவம் ஒரு பக்கம் இருக்க, ஆன்மீக ரீதியாக இப்படிப்பட்ட பரிகாரங்களை முயற்சி செய்து பார்ப்பது தவறு ஒன்றும் கிடையாது.

blue-durga

வாரம் ஒரு முறையாவது ஒரு சிறிய சொம்பில் நல்ல தண்ணீரை நிரப்பி, அதில் வேப்பிலைகளை போட்டு அந்த தண்ணீரை உங்களுடைய பூஜை அறையில் வைத்து பூஜை செய்துவிட்டு, அந்த தண்ணீரை தீர்த்தமாக தலை மேல் தெளித்துக் கொள்ளலாம். உங்களுடைய வீடு முழுவதும் தெளித்து விடுவது, வீட்டில் கெட்ட கிருமிகளை நெருங்கவிடாமல் பாதுகாக்கும். வீட்டை நோய் தொற்று அண்டாமல் இருக்க இந்த வழிபாட்டு முறைகளை முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.