உங்கள் வாழ்க்கையில் முயற்சிக்கு ஏற்ற, வளர்ச்சி இல்லையா? முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும், தடைகளைத் தகர்த்தெறியும் நரசிம்மர் வழிபாடு!

lakshmi-narasimar

நிறைய பேருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள முயற்சியும் செய்வார்கள். ஆனால் அவர்களை சுற்றியுள்ளவர்கள், அவர்களுடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள், இன்னும் ஒரு படி மேலே சொல்லப் போனால் அவர்களுடைய விதி, அவர்களுடைய தலை எழுத்து, அவர்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். எவ்வளவோ முயற்சிகளை எடுத்தாலும் அது தோல்வியில் முடியும். முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடும் அந்த விதியைக் கூட மாற்றக்கூடிய சக்தி இந்த நரசிம்மர் வழிபாட்டிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. நரசிம்மரை இந்த முறையில் தினம்தோறும் வழிபாடு செய்தால் மனம் உறுதி பெறும். வேண்டுதல் வைத்தவர் வாழ்க்கையில் தோல்வியே இருக்காது.

sad

உண்மையான பக்தியோடு இருந்த பிரஹலாதன், கூப்பிட்ட குரலுக்கு வந்து அருள் புரிந்தவர் தான் இந்த நரசிம்மர். உண்மையான பக்தியோடு நரசிம்மரை வழிபாடு செய்பவர்களை, இந்த பகவான் எந்த நாளிலும் கைவிட்டதே இல்லை. உங்களுடைய முயற்சியில் அடுத்தடுத்து தடைகள் வந்து கொண்டே இருந்தால், உக்கிரமாக இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை வீட்டில் இருந்தபடியே வழிபாடு செய்யலாம்.

பொதுவாகவே உக்கிர மூர்த்தி நரசிம்மரின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய மாட்டார்கள். விஷ்ணு பகவானின் திருவுருவப்படம் இருந்தாலும் பரவாயில்லை. விஷ்ணு பகவானுக்கு முன்பு, நரசிம்மரை மனதார நினைத்து மனதிற்குள் வேண்டி, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்க வேண்டும் என்று ‘ஓம் உக்கிர நரசிம்மாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.

narasimmar-pragalathan1

இந்த மந்திரத்தை சொல்லி உக்கிரம் நரசிம்மரை மனதார நினைத்து வழிபடுபவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கும். மன பயம் நீங்கும். எடுத்த காரியத்தில் உள்ள தடைகள் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். உங்களை அறியாமலே நீங்கள் தைரியசாலியாக மாறுவதை உணர்வீர்கள்.

- Advertisement -

சரிங்க! எனக்கு மன தைரியம் எல்லாம் அதிகமாகவே உள்ளது. இந்த பணத்தால் தான் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளது என்றால், லட்சுமி நரசிம்மரை தினமும் வழிபாடு செய்யவேண்டும். தினந்தோறும் பூஜை அறையில் லட்சுமி நரசிம்மரை நினைத்து ‘ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும். அம்பாளுடன் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை தாராளமாக, பயப்படாமல் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.

யோகம் கிடைக்க வேண்டும் என்றால் யோக நரசிம்மரை நினைத்து வழிபாடு செய்யலாம். ‘ஓம் யோக நரசிம்மர் நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். இப்படியாக உங்களுக்கு வாழ்க்கையில் எது அவசியம் தேவையோ, அதை வேண்டி நரசிம்மரிடம் வேண்டுதலை வைத்துக்கொள்ளலாம். எந்த நரசிம்மரை நீங்கள் மனமுருகி வழிபாடு செய்தாலும் சரி, நரசிம்மர் வழிபாட்டில் நிவேதனமாக பானகம் இருக்க வேண்டும். அதுதான் சிறப்பான பலனை கைமேல் கொடுக்கும்.

paanagam

பானகத்தை தயார் செய்ய தெரியாதவர்கள், பானகம் தயார் செய்ய முடியாது என்று நினைப்பவர்கள், என்ன செய்யலாம்? உலர் திராட்சை, ஏலக்காய், கற்கண்டு போன்ற நிவேதனத்தை தாராளமாக நரசிம்மருக்கு வைத்து வழிபாடு செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். எந்த வேண்டுதலாக இருந்தாலும் உண்மையோடு, மன உறுதியோடு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன் இரட்டிப்பாகும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.