உள்ளங்கையில் M வடிவ ரேகை இப்படி இருக்கான்னு பாருங்க! அவங்களுக்கு என்ன மாதிரியான சூப்பர் பவர்ஸ் இருக்கும்?

M-regai2
- Advertisement -

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முக அமைப்பையும், உடல் அமைப்பும் கொண்டிருப்பார்கள். ஒரே மாதிரியான முக அமைப்பு கொண்டவர்கள் உலகில் ஏழு பேர் இருப்பதாக கூறப்படுகிறது. 7 பேர் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாது ஆனால் கண்டிப்பாக ஒரே மாதிரியான முக அமைப்பு கொண்டவர்கள் இருவர் நிச்சயம் இருப்பதாக சான்றுகள் கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்க ஒருவருடைய உள்ளங்கை ரேகை மட்டும் மற்றவருக்கு ஒருபோதும் ஒன்றாக இருந்ததில்லை.

ஒரு சிலரைப் பார்க்கும் பொழுது நாம் அவரைப் போல இருக்கிறீர்கள், இவரைப் போல இருக்கிறீர்கள் என்று கூறுவோம். கண், காது, மூக்கு, வாய் என்று அனைத்தும் ஒரு சிலரோடு ஒத்துப் போவது உண்டு, ஆனால் பிரத்தியேகமாக இருக்கும் இந்த கைரேகை உலகில் ஒருவருடனும் ஒத்துப் போவது இல்லை. அதனால் உள்ளங்கை ரேகையில் இருக்கும் வித்தியாசமான அமைப்புகள் ஜோதிட ரீதியாக வெவ்வேறு பலன்களை குறிப்பிடுகிறது. அந்த வகையில் உங்கள் கையில் இது போன்ற M அமைப்பு இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பொதுவாக உள்ளங்கையில் கன்னாபின்னாவென்று எக்கச்சக்கமான கோடுகள் அடர்த்தியாகவும், அடர்த்தி குறைவாகவும் தெரியும். அதில் X வடிவ குறியீடுகள் அதிகம் தென்படும். குறிப்பிட்டு மூன்று அல்லது நான்கு கோடுகள் மட்டும் ரொம்பவே அடர்த்தியாக பளிச்சென தெரியும். இப்படி அடர்த்தியாக தெரியும் கோடுகளில் நான்கு கோடுகள் ஒன்று இணைந்து M போன்ற வடிவத்தை கொண்டு இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்.

சாதாரணமாக ஒருவரிடம் இருக்கும் உள்ளுணர்வு அதாவது இன்டியூஷன் M வடிவக் குறியீடு உள்ளவர்களுக்கு அதிகம் இருக்கும். வீட்டை விட்டு கிளம்பும் ஒருவருக்கு ஏதோ ஒரு பொருளை மறந்து போய்விட்டோம் என்று நினைவு வருவது உள்ளுணர்வு நமக்கு கூறும் அறிவுரையாகும். இந்த உள்ளுணர்வு அதிக அளவில் இவர்களிடம் இருக்கும். ஒரு கையில் மட்டும் M வடிவாய் குறியீடு உள்ளவர்களுக்கு மூளையில் இருக்கும் இந்த இன்டியூஷன் எதையும் மறந்து போகாமல் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும். நீங்கள் மறந்து விட்டு சென்றாலும் உடனே உங்களுக்கு நினைவூட்டி எச்சரிக்கையை எழுப்பும்.

- Advertisement -

இந்த வகையில் இரண்டு கைகளிலும் M போன்ற அமைப்பு கொண்டவர்களுக்கு அதிக உள்ளுணர்வு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நினைத்தாலும் இவர்களால் எதையும் மறக்க முடியாது, சரியாக இவர்களுடைய மூளை உள்ளுணர்வைத் தூண்டி அறிவுறுத்தி விடும். இத்தகைய சூப்பர் பவர் கொண்ட M வடிவ குறியீடு உள்ளவர்கள் உலகில் அபூர்வமாக தென்படுகின்றனர்.

M-regai1

சாதாரணமாக ஒருவரை இன்னொருவர் புரிந்து கொள்வதற்கு கொஞ்ச காலம் எடுக்கும். ஆனால் இந்த M வடிவ குறியீடு உள்ளவர்கள் ஒருவரை எடை போடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். லட்சம் பேரை வேலை வாங்கும் திறமை இவர்களிடம் இருக்கும். தனக்குக் கீழ் எவ்வளவு பெயர் பணி புரிந்தாலும் அவர்களை தலைமை ஏற்று வழி நடத்திச் செல்லும் திறமை இவர்களிடம் இருக்கும். ஒருவரைப் பார்க்கும் பொழுதே இவருக்கு அவர் எப்படிப்பட்டவர்? என்கிற ஒரு இன்டியூஷன் தோன்றிவிடும். யாரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? யாரிடம் திறமை இருக்கிறது? என்பதை அலசி ஆராயும் இவர்களுக்கு இந்த இன்டியூஷன் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

- Advertisement -