தேவையற்ற முடிகளை நீக்க ஃபேஸ் பேக்

hair removal face pack
- Advertisement -

பெண்களும் ஆண்களும் சரிசமம் என்று சொன்னாலும் ஆண்களுக்கு இருக்கும் மீசையும் தாடியும் பெண்களுக்கு வளர்த்தால் அது மிகவும் கிண்டல் கேலிக்குரிய விஷயமாக திகழ்கிறது. அப்படி வளரக்கூடிய முடிகளை நிரந்தரமாக நீக்குவதற்கு செய்யக்கூடிய பேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஹார்மோன்களின் காரணமாக தான் ஆண்களுக்கு மீசை தாடி வளர்கிறது என்று கூறப்படுகிறது. அந்த ஹார்மோன் பெண்களுக்கு அதிகமாக சுரக்கும் பொழுது அவர்களுக்கும் தேவையற்ற இடங்களில் மீசை தாடி வளர்வதற்கு வாய்ப்புகள் ஏற்படுகிறது. இதை நீக்குவதற்கு இன்றைய தலைமுறையினர் பல வழிகளை உபயோகப்படுத்துகிறார்கள். வாக்சின், த்ரெட்டிங், ஷேவிங், லேசர் என்று கூறிக் கொண்டே செல்லலாம்.

- Advertisement -

இவை அனைத்தும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அது மட்டுமல்லாமல் இவை நிரந்தரமான தீர்வை தரக்கூடியது அல்ல என்பதுதான் உண்மை. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை இந்த சிகிச்சையை மேற்கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் மறுபடியும் முடி வளர ஆரம்பித்து விடும். சரி இப்பொழுது இயற்கையான முறையில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு செய்யக்கூடிய ஃபேஸ் பேக்கை பற்றி பார்ப்போம்.

இந்த ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு நமக்கு குப்பைமேனி, வேப்ப இலை, கோரைக்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் இவைதான் தேவைப்படும். குப்பைமேனி மற்றும் வேப்ப இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் நான்கு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அரைத்து சாறெடுத்து கொள்ள வேண்டும். இதை பொடியாக வாங்கி உபயோகப்படுத்துவது சரியான பலனை தராது.

- Advertisement -

பச்சையாக பறித்து உபயோகப்படுத்துவது தான் நல்ல பலனைத் தரும். இப்பொழுது ஒரு கிண்ணத்தில் கோரைக்கிழங்கு பொடி ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும். அதனுடன் கஸ்தூரி மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நாம் எடுத்து வைத்திருந்த சாறை ஊற்றி ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் சாரை ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்து மறுநாள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவுவதற்கு முன்பாக முகத்தை நன்றாக சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

பிறகு இந்த ஃபேஸ் பேக்கை முடி இருக்கும் இடத்தில் தடவி நன்றாக காய விட வேண்டும். புருவம் மற்றும் கண்ணிமைகளில் படாத அளவிற்கு பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஃபேஸ் பேக் நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை நாம் தினமும் உபயோகப்படுத்தும் பொழுது தேவையில்லாமல் இருக்கக்கூடிய முடிகள் அனைத்தும் உதிர்வதை நம்மால் காண முடியும். ஒரு மாதத்திலேயே நல்ல பலனை தரக்கூடிய அற்புதமான ஃபேஸ் பேக் இது.

இதையும் படிக்கலாமே: கேரட் ஃபேஸ் க்ரீம்

இதை தொடர்ந்து தினமும் உபயோகப்படுத்த வேண்டும். அப்படி தினமும் உபயோகப்படுத்த முடியாதவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவது உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் முடி நிரந்தரமாக வளராது.

- Advertisement -