உடனடி சிற்றுண்டியாக உப்புமா செய்யும் எளிய முறை

upma
- Advertisement -

உப்புமா அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு டிபன் வகை. தோசை , இட்லி என்று தொடர்ந்து ஒரே மாதிரியான டிபன் வகைகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா வாருங்கள் இந்த சுவையான உப்புமா எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

upma

உப்புமா செய்ய தேவையான பொருட்கள் :

- Advertisement -

ரவை – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – சிறிதளவு

upma

உப்புமா செய்முறை :

- Advertisement -

முதலில் ஒரு கடாயில் ரவையினை கொட்டி நன்றாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பினை கொட்டி நன்றாக பொரியும் வரை கிண்டவும்.

பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் . பிறகு அதனுடன் பச்சை மிளகாய் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

- Advertisement -

upma

பிறகு நன்றாக கொதித்ததும் நாம் ஏற்கனவே வறுத்து வைத்துள்ள ரவையினை கொட்டி கிளறவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கினால் சுவையான உப்புமா தயார்.

சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Upma recipe in Tamil. It is also called as Upma seimurai in Tamil or Upma seivathu eppadi in Tamil or Upma ingredients in Tamil or Upma preparation in Tamil.

- Advertisement -