- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்பல வருடமாக பாத்ரூமில் படிந்து இருக்கும் உப்பு கறையை, 10 நிமிடத்தில் நீக்க, வெறும் 10...

பல வருடமாக பாத்ரூமில் படிந்து இருக்கும் உப்பு கறையை, 10 நிமிடத்தில் நீக்க, வெறும் 10 ரூபாய் செலவில், இதோ ஒரு புத்தம் புதிய சூப்பர் ஐடியா.

- Advertisement -

எந்த வீட்டு பாத்ரூமை பார்த்தாலும் அழுக்கு படிந்தது போல, மோசமான கறைகள் தான் இருக்கிறது. தினமும் தான் பாத்ரூமை சுத்தம் செய்கின்றோம். ஆனால் இந்த உப்பு கறையானது எப்படி தான் படிகின்றதோ தெரியவில்லை. நம் வீட்டு தண்ணீரில் இருக்கும் உப்புத்தன்மை தாங்க அதற்கு காரணம். அந்த தண்ணீரில் இருக்கும் உப்பு தன்மை பாத்ரூமில் படிந்து படிந்து கறையாக மாறிவிடுகிறது. என்னதான் சுத்தம் செய்தாலும் அந்த கறையை நீக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றோம். இப்படிப்பட்ட கறைகளை நீக்குவதற்கு நிறைய ஆசிட் கிளீனிங் லிக்விட் எல்லாம், கடைகளில் கிடைக்கின்றது. இப்படிப்பட்ட பாத்ரூம்களை சுத்தம் செய்ய நிறைய வேலையாட்கள் கூட இருக்கிறார்கள்.

ஆனால் அது எல்லாமே கொஞ்சம் கூடுதல் செலவு எடுக்கும். நம்முடைய பாத்ரூமை குறைந்த செலவில், நம் கையாலேயே சுலபமாக சுத்தம் செய்ய ஒரு ஐடியா இருக்குது. அதைப்பற்றித்தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பயனுள்ள இந்த வீட்டு குறிப்பு உங்களுக்கும் தேவைப்படும் என்றால் படித்து பலன் பெறுங்கள்.

- Advertisement -

பாத்ரூமில் இருக்கும் உப்பு கறை நீங்க சூப்பர் ஐடியா:
இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் சீயக்காய், ஷாம்பு, புளித்த தயிர். (கடையில் இரண்டு ரூபாய் சீயக்காய் தூள் பாக்கெட் கூட விற்கிறது. அதை வாங்கி கூட இதற்கு பயன்படுத்தலாம்.) ஒரு சிறிய கிண்ணத்தில் சீயக்காய் தூள் 3 டேபிள் ஸ்பூன், ஷாம்பு 1 டேபிள் ஸ்பூன், இதை பேஸ்ட் ஆக கலக்க புளித்த தயிர் தேவை. ரொம்பவும் புளித்த தயிரை தூக்கி குப்பையில் தான் கொட்டுவோம். அப்படி கொட்டாதிங்க. இப்படி பாத்ரூம் கிளீன் பண்ண பயன்படுத்திக்கோங்க.

புளித்த தயிர் இல்லை என்றால் புளித்த இட்லி தோசை மாவு பயன்படுத்தலாம். மாவு டப்பாவை இறுதியாக கழுவி எடுத்தாலே நமக்கு தேவையான மாவு கிடைத்துவிடும். அதை கீழே ஊத்தாமல் இப்படி பாத்ரூம் கழுவ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது சீயக்காய், ஷாம்பு, புளித்த தயிர் ஊற்றி ஒரு கலவையை பேஸ்ட் ஆக ரெடி பண்ணிட்டீங்க. இதை உங்களுடைய பாத்ரூமில் உப்பு கறை படிந்திருக்கும் டயல்ஸில் அப்ளை செய்து ஒரு ஸ்டீல் நாரை வைத்து லேசாக தேய்த்துக் கொடுத்தாலே போதும். தரையில் ஒட்டி பிடித்திருக்கும் உப்பு கறை சுவற்றில் ஒட்டி இருக்கும் டயல்சில் படிந்திருக்கும் உப்பு கறை எல்லாம் அப்படியே சுலபமாக நீங்கி வந்துவிடும்.

கை வலிக்க தேய்க்க வேண்டாம். பாத்திரம் தேய்ப்பது போல ஸ்டீல் நாரை கொண்டு கறை படிந்த தரையை தேய்த்தால் போதும். வசதியாக ஸ்டூல் போட்டு அமர்ந்து தினமும் நான்கு, நான்கு டயல்ஸ் என்று சுத்தம் செய்து கொள்ளுங்கள். மொத்தமாக தைத்தால் கை வலி வந்துவிடும். அப்படி இல்லை என்றால் டயல்சை கழுவுவதற்காகவே பிரத்தியகமாக பிரஷ்கள் விற்கின்றது. அதை வாங்கியும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக மொத்தம் நீங்கள் வீட்டில் தயார் செய்த இந்த சொல்யூஷனை உப்பு கறை படிந்த இடத்தில் தடவி லேசாக தேய்க்கும் போதே பளிச் பளிச் என மாறும். நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே: பழைய கவரிங் நகை,வெள்ளி நகைகளை புதுசு போல மாத்த ஒரே ஒரு ஸ்பூன் தயிரோடு இந்த பொருளை மட்டும் சேர்த்து சுத்தம் பண்ணா போதும். நல்லா பளபளன்னு புதுசா வாங்கின மாதிரி மின்னும்

தினமும் நாம் இந்த மெத்தடை பயன்படுத்த போவது கிடையாது. தினமும் லேசான துடைப்பத்தை போட்டு தேய்த்து கழுவி விட்டால் பாத்ரூம் சுத்தமாக இருக்கும். 3 மாதத்திற்கு ஒரு முறையோ, 4 மாதத்திற்கு ஒரு முறையோ பாத்ரூமை இப்படி டீப் கிளீன் செய்து வர உங்கள் பாத்ரூம் எப்போதும் புத்தகம் புதுசு போல ஜொலி ஜொலிக்கும். இந்த வீட்டு குறிப்பு தேவை என்பவர்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கு டிப்ஸ் ஒர்க் அவுட் ஆனா இதையே மெயின்டெயின் பண்ணிக்கோங்க.

சற்று முன்