வெறும் உளுந்து சருமத்தை வெள்ளையாக்குமா என்ற சந்தேகம் நம்மில் எல்லோருக்கும் எழும். ஒன்னுமே இல்லைங்க. வீட்டில் உளுந்த வடை போடுவாங்க. உளுந்த மாவை அரைத்து எடுத்து விட்டு, நீண்ட நேரம் கையை உளுந்தம் பருப்பில் வைத்து வடை விட்ட பின்பு அம்மாவோட கையை பாருங்க. கை வெள்ளையாக மாறி இருக்கும். உளுந்தம் பருப்புக்கு சரும நிறத்தை அதிகரிக்க கூடிய தன்மை உண்டு. சன் டேன் மூலம் கருப்பான சருமத்தை கூட சீக்கிரத்தில் வெள்ளையாக மாற்றிவிடும். உங்களுக்கும் வெள்ளையாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்தா. இந்த குறிப்பு உங்களுக்காக மட்டும்.
இந்த குறிப்புக்கு உங்களுக்கு தேவையான உளுந்தம் பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள். 1 டேபிள் ஸ்பூன், 2 டேபிள் ஸ்பூன் அது உங்களுடைய விருப்பம். இதை முகத்திற்கு மட்டும் அப்ளை செய்து குளித்தாலும் சரி, அல்லது உடல் முழுவதும் தேய்த்து குளித்தாலும் சரி, அதுவும் உங்களுடைய சவுகரியம் தான். 1 பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு உளுந்தம் பருப்பு எடுத்து, அது மூழ்கும் அளவிற்கு பால் ஊற்ற வேண்டும். காய்ச்சிய பால் காய்ச்சாத பால் எது வேண்டும் என்றாலும் ஊற்றலாம். உளுந்து பாலில் கட்டாயமாக 4 லிருந்து 5 மணி நேரம் ஊற வேண்டும்.
ஊறிய இந்த உளுந்தை மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாலோடு ஊற்றி மொழு மொழுவென அரைத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் ரோஸ் வாட்டர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம். ரோஸ் வாட்டர் இல்லை என்றால் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்து கூட விழுதாக இதை அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலை இந்த உளுந்தம் பேஸ்டை பயன்படுத்த வேண்டும் என்றால் முந்தைய நாள் இரவே இதை தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இரண்டு நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
எப்போதும் போல சோப்பு போட்டு குளித்து விட வேண்டும். அதன் பின்பு இந்த உலுந்து பேஸ்ட்டை முகம் கை கால்கள் முழுவதிலும் நன்றாக இரண்டு லேயர் தடவி விட்டு 20 நிமிடங்கள் ஊற விட வேண்டும். அதன் பின்பு நன்றாக ஸ்கிரப் செய்து மசாஜ் செய்து வெறும் தண்ணீரை ஊற்றி குளித்தாலே போதும். உளுந்தும் பேஸ்ட் போட்டு குளித்து விட்டு சோப்பு போட்டு குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இப்படி ஒரு முறை இந்த பேக்கை போட்ட உடனேயே உங்களுடைய சருமத்தில் மாற்றத்தை உணர முடியும்.
முகத்திற்கு மட்டும் பேக் தேவை என்றால் குளித்துவிட்டு வந்த பிறகு முகத்திற்கு மட்டும் பேக் போட்டு கூட 20 நிமிடம் கழித்து கழுவிக் கொள்ளுங்கள். தினமும் இந்த உளுந்தம் பருப்பு பேக்கை போட்டு வந்தால் நீங்கள் வெள்ளையாக மாறுவீர்கள். இந்த வெள்ளை நீண்ட நாட்களுக்கு நீடிக்குமா என்று கேட்டால், நிச்சயம் நீடிக்கும். ஆனால் தினம் தோறும் இந்த குறிப்பை 30 நாட்கள் பயன்படுத்தி வாருங்கள். அதன் பின்பு வாரத்தில் இரண்டு நாட்கள் கூட இந்த உளுத்தம் பருப்பு பேக்கை போட்டால் சருமம் நிரந்தரமாக வெள்ளையாக மாறும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
சிறிய குழந்தைகள் நீண்ட நேரமாக வெயிலில் விளையாடிட்டு வந்தால் அவர்களுடைய சருமம் மிகவும் கருப்பாக இருக்கும். இதே போல சில குழந்தைகளின் கைமுட்டி கால் முட்டி கூட கருப்பு நிறம் படிந்து இருக்கும். ஐந்து வயதுக்கு மேலே உள்ள குழந்தைகள் இருந்தால் இந்த குறிப்பை அவர்களுக்கும் பின்பற்றி பார்க்கலாம். கருப்பாக இருக்கும் குழந்தைகளின் சருமம் சீக்கிரத்தில் வெள்ளையாக மாறிவிடும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. நிச்சயமா அழகா வெள்ளையாக கூடிய ஆசை சீக்கிரத்தில் நிறைவேறும்.