மகாராஷ்டிரா ஸ்டைல்ல காரசாரமா சூப்பரான இந்த உருளைக்கிழங்கு மசாலா வறுவல் செஞ்சு பாருங்க. சாப்பாட்டுக்கு மட்டுமில்லாமல் சப்பாத்தி, நாணுக்கெல்லாம் இது பக்காவான சைடு டிஷ்

potato Masala Varuval
- Advertisement -

காய்கறிகளில் அனைவருக்கும் பிடித்த காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். இந்த உருளைக்கிழங்கு வைத்து எந்த மாதிரியான உணவை செய்து கொடுத்தாலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உருளைக்கிழங்கு வறுவலை நாம் பல வகையில் செய்வோம். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் உருளைக் கிழங்குகை வைத்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் மகாராஷ்டிரா ஸ்டைலில் ஒரு சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா வறுவல் எப்படி செய்வது என்பதை பார்க்கப் போகிறோம்.

செய்முறை

இதற்கு நான்கு உருளைக்கிழங்கை முதலில் தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கால் டீஸ்பூன் உப்பு சேர்த்த பிறகு மூடி போட்டு பத்து நிமிடம் வேக விடுங்கள்.

- Advertisement -

உருளைக்கிழங்கு வேகும் நேரத்திற்குள்ளாக இந்த வறுவலுக்கு தேவையான மசாலாவை அரைத்துக் கொள்வோம். அதற்கு மிக்ஸி ஜாரில் ஐந்து காய்ந்த மிளகாய், சின்ன நெல்லிக்காய் அளவு புளி, ஆறு பல் பூண்டு, கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து முதலில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் நன்றாக அரைபட்டவுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நல்ல பையன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் கழித்து வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் நான்கு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து சேர்த்து சிவந்து வந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பின் அரைத்து வைத்த பேஸ்ட்டை அதில் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிய பிறகு வேக வைத்த உருளைக்கிழங்கை இதில் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.

இந்த உருளைக்கிழங்கை ஐந்து நிமிடம் வரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறி விட்டால் மசாலா உருளைக்கிழங்குடன் சேர்ந்து சுவையான காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா வருவல் தயாராகி விடும்.

இதையும் படிக்கலாமே: கேழ்வரகு பால் கஞ்சி செய்வது எப்படி?

இந்த உருளைக்கிழங்கு மசாலா சாப்பிட அதிக சுவையாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதில் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்த்து செய்யாத காரணத்தினால் சீக்கிரம் கெட்டும் போகாது. வெளியூர் பயணங்களில் போது கூட இதை செய்து கொண்டு போகலாம். இந்த சுவையான மசாலா உருளைக்கிழங்கு வறுவல் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -