ஈவினிங் பிள்ளைகளுக்கு ஸ்நாக்ஸ்க்கு என்ன செய்றதுன்னு தெரியலையா? ஒரு உருளைக்கிழங்கு இருந்தா போதும், பத்தே நிமிஷத்துல சூப்பரா, நல்ல கிரிஸ்பியான முறுக்கை சட்டுனு சுட்டு எடுத்துடலாம்.

- Advertisement -

முன்பெல்லாம் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஸ்நாக்ஸாக இந்த முறுக்கை தான் சுட்டு பெரிய பெரிய டப்பாக்களில் போட்டு வைத்து விடுவார்கள். அப்போது எல்லாம் இந்த முறுக்கு செய்ய அரிசியை ஊற வைத்து,  அதன் பிறகு ஆற வைத்து அரைத்து, உளுந்தை அரைத்து பவுடர் செய்து அதையும் கலந்து என அதன் வேலை சற்று அதிகமாக தான் இருக்கும். இப்போது உள்ளதை போல ரெடிமேட் மாவு எல்லாம் அப்போது கிடையாது. ஆனால் இந்த சமையல் குறிப்பு பதிவில் இன்னும் சுலபமா பத்து நிமிஷத்துல, அதுவும் உருளைக்கிழங்கு வச்சு எப்படி முறுக்கு செய்வது என்று தான் தெரிந்து கொள்ள போறோம்.

உருளை கிழங்கு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 1, அரிசி மாவு -1 கப், சீரகம் – 1 டீஸ்பூன், எள் – டீஸ்பூன், எண்ணெய் – 200 கிராம், உப்பு -1/2 டீஸ்பூன்.

- Advertisement -

உருளை கிழங்கு முறுக்கு செய்முறை:
இந்த முறுக்கு செய்ய முதலில் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை வேக வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு உருளைக்கிழங்கு ஆறியவுடன் தோல் உரித்து கைகளால் லேசாக மசித்த பிறகு, ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் தெளித்து இதை ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அரைத்த உருளைக்கிழங்கு பேஸ்ட்டை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டில் எள்ளை சேர்த்த பிறகு, சீரகத்தை லேசாக கைகளில் கசக்கி அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அரிசி மாவை சேர்த்து உப்பும் சேர்த்த பிறகு, இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய்யை சூடு படுத்தி அதையும் இந்த மாவில் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடாக இருக்கும் கவனமாக பிசைந்து கொள்ளுங்கள். இந்த மாவில் தண்ணீர் சேர்க்க கூடாது.

- Advertisement -

மாவை பிசைந்த பிறகு இதை ஊற வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. முறுக்கு குழலில் கொஞ்சம் எண்ணெய் தேய்த்து விட்டு,  மாவு எடுத்து முறுக்கு குழலில் போட்ட பிறகு, முறுக்குகளை ஒரு பிளாஸ்டிக் கவரிலோ அல்லது வாழை இலை, தட்டு இப்படி உங்களுக்கு எந்த முறையில் மாவு பிழிந்தால் வசதியாக இருக்குமோ அதன் படி பிழிந்து முறுக்கை சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாரம் ஒரு முறை இந்த திப்பிலி ரசம் சாப்பிட்டால் குளிர்காலத்தில் வரும் சளி, இரும்பல், காய்ச்சல் பிரச்சனையே யாருக்கும் வீட்டில் வராது. இதை சூப்பு போல கூட குடிக்கலாம். சூப்பரா இருக்கும்.

நல்ல சுவையாக கிரிஸ்பியான உருளைக்கிழங்கு முறுக்கு தயார். இனி நீங்கள் முறுக்கு சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் போதும் 10 நிமிடத்திற்கெல்லாம் முறுக்கு உங்கள் முன்னே இருக்கும். இது மாலையில் குழந்தைகளுக்கு குடுக்க ரொம்ப சிம்பிள் ஆன, அதே சமயம் உருளைக்கிழங்கு சேர்த்த இருப்பதால் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் இருக்கும். நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -