இல்லத்தரசிகளுக்கு பயனுள்ள சமையல் யோசனைகள் 12!

rice-omlet
- Advertisement -

இல்லத்தரசிகளுக்கு சமையல் கட்டில் தான் பாதி வேலை நடக்கும். சமையல் கலையில் முன்னேற்றம் பெறுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பகுதியின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளும் குறிப்புகள் ரொம்பவே பயனுள்ளதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும். காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை சமையல் கட்டிலேயே பொழுதைப் போக்கும் உங்களுக்கு இந்த 12 குறிப்புகள் எவ்வளவு உதவியாக இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோமா?

poori4

குறிப்பு 1:
பூரி சுடும் பொழுது சாஃப்டாக, பெரிய பூரியாக சுடுவதற்கு பூரி மாவுடன் கொஞ்சம் நெய்யை கலந்து பிசைந்து பாருங்கள். சப்பாத்திக்கு ஊற வைப்பது போல பூரிக்கு அதிக நேரம் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. சப்பாத்திக்கு தேய்ப்பது போல இல்லாமல் சற்று தடிமனாக தேய்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 2:
உரித்த உருளைக் கிழங்குகளை நிறம் மாறாமல் இருக்க சிறிதளவு குளிர்ந்த நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் போட்டு பாருங்கள், உருளைக்கிழங்கு புதிதாக அப்படியே இருக்கும்.

potato-urulai

குறிப்பு 3:
பால் காய்ச்சும் பொழுது பாத்திரத்தின் அடியில் ஒட்டாமல் இருக்க பாலை ஊற்றும் முன் முதலில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பின் பாலை ஊற்றி காய்ச்சினால் அடிப்பகுதியில் ஒட்டாமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
சப்போட்டா, அன்னாசி போன்ற பழங்களை வாங்குபவர்கள் அதனை வெளியில் கொஞ்சம் வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

fish

குறிப்பு 5:
மீன் வாங்கி சமைக்கும் பொழுது மீனுடைய வாடைப் பிடிக்காமல் இருந்தால் அதை கழுவும் பொழுது வெதுவெதுப்பான பால் ஊற்றி சுத்தம் செய்து பாருங்கள்.

- Advertisement -

குறிப்பு 6:
பூசணிக்காய் சமைக்கும் பொழுது அதில் இருக்கும் விதைகளை எடுத்து வைத்து வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் இனிப்பு பண்டங்கள் தயாரிக்கும் போது உபயோகப்படுத்தலாம். பூசணிக்காய் விதைகளை வறுத்தும் சாப்பிடலாம்.

poosani1

குறிப்பு 7:
சாப்பாடு உதிரி உதிரியாக வரவும், நல்ல வெண்மை நிறத்தில் இருக்கவும், சாதம் வடிக்கும் போது கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்தால் போதும்.

குறிப்பு 8:
ஃப்ரிட்ஜில் பன்னீரை அதிக நாட்கள் நீங்கள் வைத்திருந்தால் அது சாஃப்ட்டாக இல்லாமல் ரொம்பவே கடினமாக மாறிவிடும் எனவே கொஞ்ச நேரம் வெந்நீரில் வைத்து எடுத்தால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்.

panner-paneer

குறிப்பு 9:
பொதுவாக காய்கறிகள் சமைக்கும் போது மூடி வைக்கத் வைத்து சமைக்கக் கூடாது. மூடி வைத்து சமைத்தால் அதன் நிறமும், மணமும் வேறு மாதிரியாக மாறிவிடும். இயற்கையான நிறமும், மணமும் இருக்க திறந்து வைத்து சமைத்துப் பாருங்கள்.

குறிப்பு 10:
முட்டையை ஆம்லெட் போகப் போகிறீர்களா? கொஞ்சம் பாலும் உளுந்த மாவும் சேர்த்து ஆம்லெட் செய்து பாருங்கள் அதன் ருசியே அபாரமாக இருக்கும்.

kadalai-paruppu

குறிப்பு 11:
பருப்பு சீக்கிரம் வேகுவதற்கு கொஞ்சம் எண்ணெய் சேர்த்துக் கொள்வார்கள். இதனால் அதன் சுவையும், புரதமும் வெளியேறாமல் முழுமையாக கிடைக்கும்.

குறிப்பு 12:
எலுமிச்சை சாத்துக்குடி பிழிவதற்கு முன்னர் கொஞ்சம் வெந்நீரில் வைத்து எடுத்து பிழிந்து பாருங்கள் நிறையச் சாறு கிடைக்கும்.

- Advertisement -