இவ்வளவு சூப்பரான டிப்ஸை எல்லாம் இத்தனை நாளா தெரிஞ்சுக்காமலே விட்டுட்டோமே! பயனுள்ள, தினசரி பயன்பாட்டிற்காக 5 சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக!

tip2
- Advertisement -

Tip No 1:
உங்க வீட்டு பூஜை அறையில் இந்த மாதிரி குட்டி குட்டி சுவாமி படங்கள் வைத்து பூஜை பண்றீங்களா? இதற்கு பூ வைப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளதா? இந்த டிப்ஸ் உங்களுக்காக. உங்கள் வீட்டில் பேனா மூடிகள் இருந்தால் அதை சுவாமி படத்திற்கு பின் பக்கமாக, செலோ பின் டேப் போட்டு ஒட்டி விடுங்கள். பேனா மூடிக்கு உள்ளே சாமந்தி பூ, ரோஜாப்பூ போன்ற பூக்களை சொருகி விடலாம். கீழே விழவே விழாது. இதோ இது மாதிரி, கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள படத்தை பாருங்கள். இது நிஜமாவே சூப்பர் டிப்ஸ்தானே!

tip

Tip No 2:
குளியலறையில் என்னதான் சோப்பு டப்பாவின் அடியில் ஓட்டை இருந்தாலும், குளிக்கின்ற சோப் தண்ணீர் பட்டு கசகசவென, குழைந்து போய்விடும். இதற்கு சூப்பரான ஒரு டிப் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். இதற்கு வெறும் 2 ரப்பர் பேண்ட்கள் போதும். சோப்பு டப்பாவில், கீழே படத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி மாட்டிவிட்டு, அதன் பின்பு, ரப்பரின் மேலே சோப்பை வைத்துக்கொள்ளுங்கள். சோப்பு தண்ணீரில் பட்டு வீணாகாமல் கொழகொழவென ஆகாமல் இருக்கும். துணி சோப்பு, குளியல் சோப்பு எதற்கு வேண்டுமென்றாலும் இந்த டிப்ஸ நீங்க யூஸ் பண்ணிக்கலாம்.

- Advertisement -

Tip No 3:
பாயாசம் சர்க்கரைப் பொங்கல் போன்ற இனிப்பு வகை பலகாரங்களை செய்யும் போது, கொஞ்சமாக ஏலக்காய் தூள் சேர்த்தால் சுவையாகத்தான் இருக்கும். ஆனால், ஏலக்காய்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தால், ஏலக்காய் தோல் மைய அரையாது இருக்கும். முதலில் கடாயை சூடு செய்துவிட்டு, ஏலக்காய்களை அந்த கடாயில் போட்டு லேசாக சூடு படுத்தி விட்டு ஆற வைத்து, அதன் பின்பு மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டி விடுங்கள். அதன் பின்பு அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு அரைத்தால் ஏலக்காய்த்தூள் பொடியாக சூப்பராக தயாராகிவிடும். காய்ந்த டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு பலகாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

tip1

Tip No 4:
நம்ம வீட்ல பயன்படுத்தும் குக்வரின் உள் பக்கத்திலும், அடிப்பக்கத்தில் என்னதான் பாத்திரம் தேய்க்கும் போது சுத்தமாக தேய்த்தாலும், கொஞ்சம் கரை பிடிக்கத்தான் செய்யும். இந்த கரையை சுலபமாக எப்படி நீக்குவது? குக்கருக்கு உள்ளே ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, கொதிக்க விடுங்கள். அதில் சாதாரணமாக சமையலுக்குப் பயன்படுத்தும் கல் உப்பு ஒரு ஸ்பூன் போடுங்கள், 1/2 எலுமிச்சை பழ சாறுபிழிந்து விடுங்கள். அந்த தோலையும் அந்தத் தண்ணீரிலேயே போட்டுவிடுங்கள். துணி துவைக்கும் பவுடர், லிக்விட் ஏதாவது இருந்தால் அதன் உள்ளே ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

இந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விடவேண்டும். நுரைக்கொண்டு பொங்கிவரும். அடுப்பை சிம் ஆக்கிவிட்டு, ஐந்திலிருந்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடலாம். அதன் பின்பு தண்ணீரை அகலமான பேசினில் ஊற்றிவிட்டு, ஸ்டீல் நாரை வைத்து தேய்த்தால், எல்லா கருப்பு நிறமும் நீங்கி, உங்களது குக்கர் புதுசு போல மாறிவிடும்.

cooker-cleaning

மேல் பக்கம் உள்ள கரைகளை நீக்க வேண்டும் என்றால், உள்ளே சுத்தம் செய்ய தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டீர்கள் அல்லவா? அதே தண்ணீரை ஒரு அகலமான பாத்திரத்தில் ஊற்றி, அந்த குக்கரின் மேல் பக்கத்தை அதில் மூழ்க வைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து தேய்த்தால் மேல்பக்கம் இருக்கும் கரையும் சுத்தமாக நீங்கி விடும். ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

kitchen2

Tip No 5:
உங்களுடைய சிங்குக்கு அடியில் எப்போதுமே நாற்றம் அடித்துக்கொண்டே இருக்குமா? ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக சோடா உப்பு போட்டு விட்டு, கம்போர்ட் போன்ற ஃபேப்ரிக் கண்டிஷனர் உங்கள் வீட்டில் இருந்தால், அதை ஒரு ஸ்பூன் அந்த சோடா உப்பில் ஊற்றி, அந்த கிண்ணத்தை அப்படியே சிங்குக்கு அடியில் வைத்து விடுங்கள். கமகம வாசத்தோடு உங்களது சமையலறை இருக்கும்.

இதையும் படிக்கலாமே
அட, மீதமான அடை மாவை வைத்து இப்படி ஒரு இட்லியை சுட முடியுமா? இத்தனை நாட்களாக இது தெரியாமல் புளித்த அடை மாவை கீழே ஊற்றி விட்டோமே!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -