உதடு வெடிப்பு நீங்கி உதடு பளபளக்க கை வைத்தியம்

uthadu vedippu

தட்ப வெப்பச் சூழ்நிலை மாற்றத்தால் ஒரு சிலருக்கு உதடுகளில் வெடிப்புகள் ஏற்படும். இது அணைத்து வயதினருக்கும் ஏற்படுகின்ற பொதுவான ஒரு பாதிப்புதான். இதற்கான சித்த மருத்துவம் சார்ந்த தீர்வுகளை இங்கு காண்போம்.

lips problem

குறிப்பு 1 :
தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும்.

குறிப்பு 2 :
நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும்.

honey குறிப்பு 3 :
உதடுகளில் ஈரப்பதம் குறையாமலிருக்க அடிக்கடி நீரையும், பழச்சாறுகளையும் பருக வேண்டும் இது உதடு வெடிப்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

குறிப்பு 4 :
காலை, மாலை வேளைகளில் ரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து உதட்டில் பூசிவர வேண்டும். புண்ணாகிப்போன உதடுவெடிப்புகள் குணமாக நல்லெண்ணெய்யையோ, நெய்யையோ தடவ அப்புண்கள் விரைவில் குணமாகும்.

rose

குறிப்பு 5 :
எலுமிச்சையின் சாற்றை உதட்டுப்புண்கள் ஆறிய பிறகு தடவிவர உதடுகள் பழைய நிறத்தையும், பளபளப்பையும் பெரும்.

இதையும் படிக்கலாமே:
இடுப்பு வலி குணமாக பாட்டி வைத்தியம்

English Overview:
Here we have sitha muruthvam tips for lips problem in Tamil. lips burning or uthadu vedippu wi cause pain in lips. So home made remedies for that is here.