உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு மிகுதியான செல்வம் சேர இவற்றை செய்ய வேண்டும்

uthiratathi

ஜோதிடத்தில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் சனி கிரக பெயர்ச்சிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஏனெனில் சனி கிரகம் தான் ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் ஆயுள்காரக கிரகமாக இருக்கிறது. மேலும் வாழ்வில் அளவற்ற செல்வத்திற்கும் அல்லது மிகுதியான கஷ்டங்கள் உண்டாகவும் சனி கிரகம் காரணமாக அமைகிறது. அப்படியான சனிபகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஒரு நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் இருக்கிறது. இந்த உத்திரட்டாதி நட்சத்திரகாரர்கள் மிகுதியான செல்வங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

poosam-natchathiram sani

27 நட்சத்திரங்கள் வரிசையில் இருபத்தாறாவது நட்சத்திரமாக உத்திரட்டாதி நட்சத்திரம் வருகிறது. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை மகா ஈஸ்வரனாக இருக்கும் சிவ பெருமான் ஆவார். சனி பகவானின் ஆதிக்கம் கொண்டிருப்பதால் மிகுந்த பொறுமை குணமும், கடினமாக உழைப்பவர்களாகவும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்கள். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான செல்வ வளங்களை பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்ய வேண்டும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் நட்சத்திர அதிபதியான சனி பகவானின் முழுமையான நல்லருளை பெறுவதற்கு வருடத்திற்கு ஒரு முறை திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று, சனீஸ்வரனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும். வாரந்தோறும் வரும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி, இனிப்பு அல்லது கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து, வழிபட்டு வர வாழ்வில் சிறப்பான பலன்கள் ஏற்படுவதை காணலாம். சனி பிரதோஷ தினங்களில் சிவ பெருமானையும், அம்பாளையும் வழிபட்டு வர உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்வில் பல நன்மைகள் உண்டாக்கும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

cow shed

தினமும் நீங்கள் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக சனிபகவானின் வாகனமாகிய காகங்களுக்கு சிறிது உணவை வைத்த பிறகு சாப்பிடுவதால், சனீஸ்வர பகவானின் அருட்பார்வை உங்களுக்கு கிடைத்து அதனால் வாழ்வில் நன்மையான பலன்கள் அதிகரிக்கும். ஏதேனும் சனிக்கிழமை தினத்தில் உடல் ஊனமுற்றவர்களுக்கு ஆடை மட்டும் இனிப்புகளை தானம் செய்வது நன்மை பயக்கும். கோவில்களில் 2, 4, 6 போன்ற இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கும் பசுமாடுகளுக்கு ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கும் இரட்டை வாழைப்பழங்களை, சிறிது தேன் தடவி உணவாக கொடுப்பதன் மூலம் உங்கள் நட்சத்திரத்திற்கு மிகுதியான அதிர்ஷ்டங்கள் உண்டாக செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாகும்.

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி, எதிரிகள் தொல்லை நீங்க பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Uthirattathi nakshatra pariharam in Tamil. It is also called as Uthirattathi natchathiram athipathi in Tamil or Uthirattathi natchathiram athi devathai in Tamil or Nakshatra parigarangal in Tamil or Uthirattathi natchathira kovil in Tamil.