வாழ்வில் அதிஷ்டமே இல்லை என்று கவலையா? இதை மட்டும் செய்யுங்கள் அதிஷ்ட லட்சுமி நிரந்தரமாக உங்களிடம் குடி இருப்பாள்.

luck

சில சமயங்களில் நம் வாழ்நாளில் நாம் எந்த ஒரு முயற்சியும் செய்யாமலேயே ஒன்று நமக்கு கிடைக்கின்ற பொழுது, அது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். அதை தான் சிலர் “அதிர்ஷ்டம்” என்று கூறுவார்கள். அதிர்ஷ்டம் என்பதை விரும்பாத நபர்களே அனேகமாக இருக்க முடியாது. அத்தகைய அதிர்ஷ்டம் என்பது அனைவரின் வாழ்விலும் சுலபத்தில் ஏற்படக்கூடிய விடயமாக இருப்பதில்லை. சிலருக்கு தங்களின் பூர்வ புண்ணிய பலன்களின் பலனாக அதிர்ஷ்டகரமான வாழ்வு அமைகிறது. ஒரு சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வளவு கடினமாக முயற்சித்தாலும் அதிர்ஷ்டம் என்பது அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கும். இருந்தாலும் அதிர்ஷ்டம் நம் வாழ்வில் ஏற்படுவதற்கான சில பரிகார முறைகளை நாம் கடைப்பிடிப்பதால் நமக்கும் அத்தகைய அதிர்ஷ்டங்கள் ஏற்படும் என அனுபவம் பெற்ற பெரியோர்கள் கூறியிருக்கின்றனர். அத்தகைய அதிர்ஷ்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் சிலவற்றை குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

kuladheivam 1

தங்கள் வாழ்வில் தங்களுக்கு நிலையான அதிர்ஷ்ட பெண்கள் எப்போதும் தொடர்ந்த வண்ணம் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தங்களின் குல தெய்வங்களுக்கு சரியான காலங்களில் பூஜைகள் செய்து வழிபட்டு வருவது சிறந்த பரிகாரமாக அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் நினைத்த நேரங்களுக்கு தங்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாது. அப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் காலையில் எழுந்ததும் தங்களின் மனதிற்குள்ளாக தங்களின் குலதெய்வங்களின் பெயரைச் சொல்லி வழிபாடு செய்து, தங்களின் அன்றாட வேலைகளை கவனிக்க செல்வது வாழ்வில் பல வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு அற்புத பரிகார வழிமுறையாகும்.

ஆண்களோ, பெண்களோ தங்களுக்கே வாழ்நாள் முழுவதும் எப்போதும் அதிர்ஷ்டங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் வருகின்ற ஏழு நாட்களிலும் அந்தந்த நாட்களுக்குரிய கிரகங்களுக்கு பிரியமான நிறங்களில் ஆடைகளை அணிந்து செல்வதால், உங்களுக்கு அன்றைய தினத்தில் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகி, வளமான வாழ்வு உண்டாகச் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். இப்படி பல விதமான நிறங்களில் ஆடை அணிபவர்கள் எக்காரணம் கொண்டும் அடர் கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது. ஏனெனில் கருப்பு நிறம் என்பது சனி பகவானின் நிறம். மேலும் கருப்பு நிற ஆடைகள் உங்களைச் சுற்றி இருக்கின்ற எதிர்மறையான ஆற்றல்களை அதிகம் ஈர்த்து, உங்கள் மனம் மற்றும் சூட்சும உடல்களின் மீது செலுத்தக் கூடிய ஆற்றல் பெற்றதாக உள்ளது.

fish tank

பல வகையான வண்ண மீன்கள் இருக்கும் நீர்நிலைகள் நேர்மறையான ஆற்றல்களை அதிகம் ஈர்க்கும். அதிர்ஷ்டங்களை விரும்புபவர்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பல வண்ணங்களில் இருக்கின்ற வகையில் மீன்கள் கொண்ட மீன்தொட்டியை வைப்பது சிறந்தது. அப்படி மீன்கள் வளர்க்க முடியாத நிலையில் இருப்பவர்கள், வீடுகளுக்கு முன்பாக தங்க நிற மீன் பொம்மை அல்லது அந்த நிற மீனின் படத்தை வைப்பதால் உங்கள் வீட்டிற்கு நேர்மறையான சக்திகளை அதிகம் ஈர்த்து அதிர்ஷ்டங்களை அதிகம் ஏற்படுத்தும்.

தொழில், வியாபாரம் மற்றும் பண வரவு தொடர்பான விஷயங்களுக்காக வெளியில் செல்லும் நபர்கள் தங்கள் சட்டைப் பையில் அல்லது பணம் வைக்கும் மணி பர்ஸ்களில் ஒரு தூய்மையான வெள்ளை நிற காகிதத்தில், சிறிதளவு தூய்மையான மஞ்சள் தூளைப் போட்டு மடித்து வைத்து எடுத்துக் கொண்டு செல்வதால் அந்த மஞ்சளில் இருந்து வெளிப்படும் நேர்மறையான ஆற்றல் நீங்கள் விரும்பித் செல்கின்ற காரியங்கள் உங்களுக்கு சாதகமாக மாறி நற்பலன்களை கொடுக்கும். இந்த சூட்சம பரிகார முறையினை தொடர்ந்து நீங்கள் பின்பற்றி வர உங்கள் வாழ்க்கை அதிர்ஷ்டம் நிறைந்ததாக மாறும்.