இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள அட்டகாசமான ரோட்டுக்கடை வடகறி!  இதன் வாசம் அடுத்த வீதி வரை வீசும். இந்த ரெசிபியை மிஸ் பண்ணிடாதீங்க!

vadacurry

வடகறி அப்படின்னு சொல்லும் போதே வாசம் நம்ம வீட்டுல வீசுது. அந்த அளவிற்கு மசாலா வாசனை நிறைந்த வடகரையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக ரோட்டோரங்களில் இந்த வடகறி கொஞ்சம் பிரபலமாக இருக்கும். பெரிய பெரிய ஹோட்டல்களில் வடகறி சாப்பிடுவதைவிட ரோட்டோரங்களில் தள்ளுவண்டி கடையில் வடகரையை சாப்பிட்டால் அதன் சுவை கொஞ்சம் கூட தான் இருக்கும் அல்லவா. அதே சுவையில் ஒரு வடை கறி எப்படி செய்வது? அதுவும் சுலபமாக பார்த்து விடலாமா?

முதலில் 200 கிராம் அளவு கடலைப்பருப்பை தண்ணீரில் போட்டு 2 மணி நேரங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க! அதில் ஊறவைத்த கடலைப்பருப்பை சேர்த்து 2 – வரமிளகாய், 1/2 ஸ்பூன் – அளவு சோம்பு சேர்த்து, 1/2 ஸ்பூன் – உப்பு போட்டு கரகரப்பாக பருப்பு வடைக்கு அரைப்பது போல அரைத்து கொள்ள வேண்டும் மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

அதன் பின்பு அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து கொள்ளுங்கள். இந்த மாவை தோசைக்கல்லில் அடை போல தட்ட வேண்டும். (கொஞ்சம் தடிமனாக கட்டிக் கொள்ளலாம்.) அதற்கு முன்பு தோசைக்கல்லில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு தடவி, இந்த மாவை தட்டி கொஞ்சம் எண்ணெய் விட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சிவக்க வைத்து எடுத்து நன்றாக ஆறவைத்து, உதிரி உதிரியாக உடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும். ரொம்பவும் சிவக்க வேண்டாம் மாவு வெந்து இருந்தால் போதும்.

vadacurry1

அடுத்தபடியாக ஒரு குக்கரை அடுப்பில் வையுங்கள். 4 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக காயட்டும். பட்டை – 2, லவங்கம் – 4, சோம்பு – 1 ஸ்பூன், பிரியாணி இலை – 2 இந்தப் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2 போட்டு வதக்கவேண்டும். அடுத்தபடியாக பச்சை மிளகாய் – 4 கீனியது , கருவேப்பிலை – 1 கொத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி -1 இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கி விடுங்கள்.

- Advertisement -

தக்காளி 90 சதவிகிதம் வதங்கியவுடன் குழம்பு மிளகாய் தூள் – 3 டேபிள்ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உப்பு குழம்புக்கு தேவையான அளவு, புதினா – 2 இனுக்கு (10 லிருந்து 15 இலைகள்), கொத்தமல்லித் தழை – 1/2 கைப்பிடி அளவு இந்த பொருட்களையும் சேர்த்து ஒரு நிமிடங்கள் வரை வதக்கி 3 பெரிய டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும். இந்த இடத்தில் உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

vadacurry2

அதன்பின்பு உதிர்த்து வைத்திருக்கும் கடலைமாவு அடையை, குக்கரில் கொதிக்கும் மசாலா தண்ணீரில் சேர்த்து, 1 முறை கலந்து விட்டு கொத்தமல்லி தழையை தூவி, மூடி போட்டு விசில் போட்டு விடுங்கள். மிதமான தீயில் ஒரு விசில் வைத்தால் போதும் உங்களுடைய வீடே கமகமக்கும் வடகறி வாசத்தில்! இந்த வாசம் நிச்சயம் பக்கத்து வீட்டுக்குப் போகம். சுடச்சுட இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு இதை விட சூப்பரான சைடிஷ் வேறு இருக்கவே முடியாது. ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
அட! சுவையான, சூப்பரான, காரசாரமான பருப்பு உருண்டை குழம்பை வைப்பது இவ்வளவு ஈஸியா? இது தெரியாம போச்சே! இப்படி செய்தால் உருண்டைகள் உடைவதற்கு வாய்ப்பே இல்லை.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.