சென்னை பேமஸ் வடகறியை கொஞ்சம் நம்ம பாட்டி காலத்து ஸ்டைலில் செய்து பார்க்கலாமா?. வடகறியை இவ்வளவு டேஸ்ட் கூட செய்ய முடியுமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கும் இந்த முறை

- Advertisement -

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு பேமஸ் என்பது போல இந்த வடகறியானது சென்னை வாசிகளின் பேமஸான உணவு. இந்த வடகறி இப்போது எல்லா இடத்திலும் கிடைக்கத் தான் செய்கிறது. ஆனால் வடகறியை பல முறைகளில் செய்து வருகிறார்கள். கொஞ்ச நாட்களுக்கு முன்பு இப்போது உள்ளதை போல் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து எல்லாம் செய்யும் பழக்கம் கிடையாது. முன்பெல்லாம் இந்த வடகறியை வீட்டில் செய்வதே அபூர்வம் தான். வடகறி சாப்பிட வேண்டும் என்றால் ஒட்டலுக்கு தான் செல்ல வேண்டும். அதனாலயே மற்ற சைடிஷ்களை விட  வடகறிக்கு எப்போதுமே தனி மவுசு தான். இப்போது அதே பழைய முறையில் இந்த வடகறியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு – 200 கிராம், பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 4 ,பச்சை மிளகாய் – 3, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 10 பல், புதினா, கொத்தமல்லி – 1 கைப்பிடி, கருவேப்பிலை – 1கொத்து, மிளகாய் தூள்- 1 டீஸ்பூன், தனியாத்தூள் – 1 டீஸ்பூன், சோம்புத்தூள் -1/2 டீஸ்பூன், சோம்பு – 1/2 டீஸ்பூன், உப்பு – 1ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கிராம்பு, ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை – தாளிக்க,

- Advertisement -

வடகறி செய்வதற்கு முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும். அதன்பின் பருப்பை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் வடித்து மிக்ஸி ஜாரில் சேர்த்து (தண்ணீர் சேர்க்க வேண்டாம்) இத்துடன் கொஞ்சம் சோம்பு இரண்டு பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், கொஞ்சம் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இட்லி பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டு வைத்து அரைத்த கடலைப்பருப்புபை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து (உருண்டை குழம்புக்கு பிடிப்பதை போல)இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது வடகறி தாளித்துக் கொள்ளலாம், அடுப்பை பற்ற வைத்து கொஞ்சம் அகலமான கடாயாக வைத்துக் கொள்ளுங்கள், அதில் எண்ணெய் ஊற்றி சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்த பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை போட்டு பொரிந்தவுடன் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வதங்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு பூண்டையும், இஞ்சியும் தட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை விட இப்படி சேர்க்கும் போது வடகறி நல்ல மணமாக இருக்கும். இதை சேர்த்த பிறகு பச்சை மிளகாயை இரண்டாக கீறி சேர்க்க வேண்டும் இவையெல்லாம் சேர்த்த பிறகு தக்காளியையும் கொஞ்சம் பெரியதாகவே நறுக்கி அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவையெல்லாம் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள், தனியா தூள், சோம்புத்தூள், மஞ்சள் தூள், எல்லாம் சேர்த்து அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள்.

அடுத்து வேக வைத்த கடலைப்பருப்பு உருண்டைகளை நன்றாக உதிர்த்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்து இருக்கும் இதில் உதிர்த்து வைத்திருக்கும் கடலைப்பருப்பை போட்ட பிறகு இதன் மேல் கொத்தமல்லியும் புதினாவையும் தூவி அப்படியே தட்டு போட்டு பத்து நிமிடம் வரை மூடி வைத்து விடுங்கள். (தண்ணீர் போதவில்லை என்றால் கொஞ்சமாக வெந்நீர் சேர்த்து கொள்ளலாம்).

இதையும் படிக்கலாமே: 1 கப் கேழ்வரகு மாவு இருக்கா? ஆரோக்கியமான நல்ல டேஸ்டியான பக்கோடா இப்படி செஞ்சா சுவையாகவும் இருக்குமே! நேரம் இருந்தால் இன்னிக்கே செஞ்சு பாருங்க.

ஐந்து நிமிடம் கழித்து மூடியை திறந்து விடுங்கள். நல்ல கம கம என்று வாசனை உடன் சூப்பரான வடகறி தயாராகி இருக்கும். இப்படி ஒரு முறை இந்த வடகறியை செய்து பாருங்கள், இதற்கு அதிக எண்ணெய் தேவை இல்லை வேக வைத்து சாப்பிடும் போது கடலைப்பருப்பு ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் கூட சாப்பிடலாம் சுவையும் மனமும் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -