பேசும்போது அதிகமாக உங்களுக்கு வாய் துர்நாற்றம் வீசுமா? இந்த தண்ணீரில் 2 முறை வாய் கொப்பளித்தால் போதும். வாய் துர்நாற்றம் உடனடியாக நீங்கும்.

smell
- Advertisement -

நமக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறது என்பது நமக்கே தெரியாது. ஆனால் நாம் பேசும்போது வெளிவரக்கூடிய இந்த துர்நாற்றமானது நம் எதிரில் நிற்பவர்கள் உடைய முகத்தை சுழிக்க வைக்கும். நம்மை விட்டு நகர்ந்து நகர்ந்து தூரமாக செல்வார்கள். பெரும்பாலும் நமக்கு வாய் துர்நாற்றம் வீசுகிறது என்பதை நம் அருகில் நின்று பேசுபவர்கள் நம்மிடம் சொல்ல மாட்டார்கள். நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் யாராவது இருந்தால் சொல்லுவார்கள். உன்னுடைய வாய் துர்நாற்றம் அடிக்கிறது. உடனே போய் பல் துலக்கு என்று.

அடுத்தவர்களுக்கு பெரிய கஷ்டத்தை கொடுக்கக்கூடிய இந்த வாய் துர்நாற்றப் பிரச்சனை உங்களுக்கும் இருக்கிறதா. முதலில் இந்த வாய் துர்நாற்றம் வருவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கிறது. அந்த காரணங்களை எல்லாம் சரி செய்து வாய் துர்நாற்றத்தை சுலபமாக நீக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சின்ன சின்ன குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நம்முடைய பல்லை நன்றாக தேய்த்து விட்டால் மட்டும் வாயில் இருக்கும் துர்நாற்றம் நீங்கி விடாது. சிலருக்கு பல் தேய்த்த உடனே கூட வாயிலிருந்து துர்நாற்றம் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. வாய் துர்நாற்றம் வீச வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல்புண், தொண்டையில் கிருமி, தொண்டையில் சளி பிரச்சனை, உணவுக்குழாயில் செரிமான பிரச்சனை, இப்படி நம்முடைய உடலில் உள்ளுறுப்புகளில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளின் காரணமாகத்தான் வாயில் துர்நாற்றம் வீசுகின்றது.

இதை சரிசெய்ய ஒரு சுலபமான வழி உள்ளது. அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு குறிப்பு தான் இது. இதற்கு நெல்லி பொடி, சீரகப்பொடி இந்த இரண்டு பொடியும் தேவை. இந்த இரண்டு பொடியும் மளிகை கடையில் கிடைக்கும். இரண்டு பொடியையும் சம அளவில் வாங்கி ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடிதான் வாய் துர்நாற்றத்தை நீக்க போகின்றது.

- Advertisement -

காலையில் எழுந்தவுடனே பல்தேய்த்து விடுவீர்கள். அதன் பின்பு 1/2 தம்ளர் தண்ணீரில், 1/2 ஸ்பூன் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை போட்டு நன்றாக கலந்து இந்த தண்ணீரை வாய்க்குள் ஊற்றி அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் போல இந்த தண்ணீர் உங்கள் வாய்க்குள்ளேயே இருக்கட்டும். அதன் பின்பு நன்றாக கொப்பளித்து வெளியே துப்பி விடுங்கள்.

அதன் பின்பு இந்த பொடியை மீண்டும் 1/2 டம்ளர் அளவு தண்ணீரில், 1/2 ஸ்பூன் அளவு கலந்து அப்படியே உள்ளுக்கு குடித்துவிட வேண்டும். இதன் மூலம் நம்முடைய வயிற்றில் இருக்கக்கூடிய குடல்புண், தொண்டைப்புண் இவைகள் அனைத்தும் சரியாகிவிடும். தினம்தோறும் இதை தொடர்ந்து ஒரு மாதம் செய்து பாருங்கள். உங்களுடைய வாய் துர்நாற்றத்தில் உங்களுக்கு நிச்சயம் வித்தியாசம் தெரியும். ஒருவேளை இந்த குறிப்பை பின்பற்றி பார்த்தும் உங்களுக்கு வாய் துர்நாற்றம் வீசிக் கொண்டே இருக்கிறது என்றால், ஒருமுறை நீங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

வாய் துர்நாற்றம் உடையவர்கள் அடிக்கடி வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு போட்டு கரைத்து அந்தத் தண்ணீரை வாய்க்குள் இரண்டு நிமிடம் வைத்து கொப்பளித்து வர, வாயில் இருக்கும் கிருமிகள் அழியும். இது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இருப்பினும் வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் இதை அடிக்கடி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்துர்நாற்றம் என்பது ஒரு சின்ன விஷயம் தான். ஆனால் இதன் மூலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரும். அதோடு மட்டுமல்லாமல் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நாம் என்றைக்குமே தொந்தரவாக இருக்கக்கூடாது. உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -