சித்திரை முடிந்து வைகாசியில் எந்த 5 ராசிக்காரர்களுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகம்?

muruga-astro

சித்திரை முடிந்து வைகாசி மாதம் பிறக்கும் பொழுது பொதுவாகவே நோய் தாக்கம் அதிகமாக இருக்கும். அக்னி நட்சத்திரம் முடிந்ததும் பிரபஞ்ச சக்திகளின் மாற்றத்தால் உடலில் பல்வேறு விதமான நோய் தாக்குதல்கள் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புக்கள் உண்டு. அந்த வகையில் சித்திரை முடிந்து வைகாசி மாதத்தில் எந்த 5 ராசிகளுக்கு நோய் தாக்கும் அபாயம் அதிகம் உண்டு என்று ஜோதிடம் கூறுகிறது? அவர்கள் எப்படி எச்சரிக்கையாக இருக்கலாம்? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sun

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தின் துவக்கத்தில் நோய் தாக்குதல்கள் ஏற்படுவதற்கு அதிகம் வாய்ப்பு உண்டு. கூடுமானவரை தேவை இல்லாமல் இவர்கள் வெளியே செல்வதையும், வெயிலில் செல்வதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய உணவு வகைகளை உண்பது ஆரோக்கியம் காக்க உதவும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது நன்மை பயக்கும்.

மிதுனம்:
Mithunam Rasi
மிதுன ராசிக்காரர்கள் வைகாசி மாத இடைப்பகுதியில் நோய்த் தாக்குதல்களுக்கு அதிகமாக ஆளாக நேரிடும். காலநிலை மற்றும் தட்பவெப்ப மாற்றத்தால் உடல் சூடு அதிகரிக்கும். உடலை குளிர்ச்சியாக செய்யக் கூடிய உணவு வகைகளை சமைத்து உண்பது நல்லது. கூடுமானவரை உச்சி வெயில் பொழுதில் வெளியில் செல்வதை தவிர்ப்பது உத்தமம். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பது ஆரோக்கியம் காக்க உதவும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்கள் வைகாசி மாதத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து கொள்ள வேண்டும். தொழில் ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் சமையலில் சேர்க்கும் அதிக எண்ணெய் உடலுக்கு கெடுதியை உண்டு பண்ணும். மேலும் உணவில் இஞ்சி, பூண்டு அதிகம் சேர்த்து கொள்ள ஆரோக்கியம் காக்க உதவும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு சித்திரை முடிந்து வைகாசி துவங்கும் பொழுது உடலில் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உணவு கட்டுப்பாடு அவசியம் மேற்கொள்வது நல்லது. மேலும் வெளியிடங்களில் பயணம் செய்வதையும் தவிர்க்கவும். உணவில் மிளகு அதிகம் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியம் காக்க உதவும். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். மிளகிற்கு ஆயுள் காக்கும் சக்தியும் உண்டு. தனுசு மட்டுமல்ல எல்லா ராசிக்காரர்களும் மிளகு, இஞ்சி, பூண்டு, வெற்றிலை, சீரகம், எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து கசாயம் காய்ச்சி குடிக்கலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு வைகாசி மாதத்தில் கிரக நிலைகளின் அடிப்படையில் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொண்டை புண், வாய்ப்புண், நீர் கடுப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த அளவிற்கு நீங்கள் நீர் ஆகாரம் எடுத்துக் கொள்கிறீர்களோ! அந்த அளவிற்கு உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற வெளியிட பயணங்கள் தவிர்ப்பது உத்தமம். உடல் நலக்கோளாறு ஏற்பட்டவுடன் கவனிப்பது நல்லது. எதிலும் அலட்சியமாக இல்லாமல் விழிப்புணர்வுடன் செயல்படுவது உத்தமம்.