வைகாசி மாத ராசி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லியமான கணிப்பு

vaigasi-matha-rasi

வைகாசியில் சூரியன் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்யும் காலம் ஆகும். இக்காலகட்டத்தில் ஆயுளும், செல்வ விருத்தியும், புத்திர பாக்கியமும் கிடைக்கப் பெறும். இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாகவும் அமைந்து இருக்கிறது. இம்மாதத்தில் ஆலயங்களில் புனித நீராடல் செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். தடைபட்டுக் கொண்டிருந்த சுப காரியங்கள் இனிதே கைகூடி வரும் யோகம் உண்டாகும். வைகாசியில் முருகப்பெருமான் விசாகன் என்கிற அசுரனை அழித்ததால் வைகாசி விசாகம் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த வைகாசி மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் கிடைக்க இருக்கிறது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சூரியன் உங்கள் ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். இதுவரை இருந்து வந்த நோய் நொடிகள் படிப்படியாக குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். நீண்ட நாள் தள்ளி சென்ற புத்திரப் பேறு கிடைக்கப் பெறும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் அதிகம் பொறுமையுடன் இருப்பது நல்லது. உத்தியோகம் செய்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வெளியில் பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும். விநாயகரை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உடலில் உஷ்ண பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்களை வென்று காட்டுவீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அடையும். மருத்துவ ரீதியான செலவுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. உடலில் அடிக்கடி சோர்வு ஏற்படும். கந்த சஷ்டி கவசம் படிக்க நடக்கும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்கள் இம்மாதம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெண்களுக்கு செய்யும் வேலையில் கவனம் சிதறும் என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாகும் என்பதால் கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிட பயணங்களில் உடைமைகள் மீது கவனம் தேவை. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நலம் தரும். முருகப்பெருமானை வழிபடுவதால் நன்மைகள் நடக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுபகாரியம் பற்றிய பேச்சு வார்த்தைகள் சுபமாக நடக்கும். இவரை கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் சலுகைகள் கிடைக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதக பலன்கள் கிடைக்கும். கொடுக்கப்பட்ட சவால்களை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் வென்று காட்டுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். பெண்களுக்கு நினைத்த காரியம் நடக்கும். தொலைதூர வெளியிட பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இரவுப் பயணங்களை தவிர்க்கவும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான அமைப்பாக இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் நல்ல பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கப் பெறுவீர்கள். மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த இணக்கம் அதிகரிக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் போட்டியாக இருப்பவர்களை எளிதாக சமாளிப்பீர்கள். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சகோதர, சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஆதாயம் காண்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விஷ்ணு பகவானுக்கு துளசி மாலை சாற்றி வழிபட நல்லது நடக்கும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமான பலன்கள் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் சாதக பலன் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். நிலுவையிலிருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். பழைய கடன் பாக்கிகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளுடன் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை உடன் இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் பெருகும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் நன்மைகள் நடக்கும். மாதத்தின் கடைசி நாட்களில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். நவக்கிரக சந்நிதியை வலம் வாருங்கள் நல்லது நடக்கும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க கூடுமானவரை உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கூடுமானவரை எச்சரிக்கை செய்து கொள்வது நல்லது. சங்கடம் தீர சனீஸ்வர பகவானை வழிபடுங்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இம் மாதம் இனிய மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களைப் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்படும் சவால்களை திறம்பட செய்து முடிப்பீர்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எளிதாக சமாளிக்கும் திறமை ஏற்படும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கை தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உங்கள் ராசிக்கு இம்மாதம் ராகு கால துர்க்கை அம்மனை வழிபட நல்லது நடக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இம்மாதம் சங்கடங்கள் தீர்ந்து நிம்மதி உண்டாகும் இனிய மாதமாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியே அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணப்புழக்கம் சரளமாக நடைபெறும். உங்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பெண்களுக்கு தட்டிப் பறிக்க நினைத்த சில விஷயங்கள் கை நழுவிப் போகக் கூடும். சுக்கிரனை வழிபடுங்கள் சுபிட்சம் பெறலாம்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இம்மாதம் நினைத்ததெல்லாம் நடக்க கூடிய அற்புதமான மாதமாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து பரஸ்பர அன்பு மேலோங்கும். ஒருவரை ஒருவர் தனிமையில் பேசி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வது நலம் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பொறுமையுடன் இருக்க வேண்டிய மாதமாக இருக்கிறது. உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் உத்தமம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் அதனை செய்து காட்டுவீர்கள். வெற்றிக்கான வேங்கடவனை வணங்குங்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இம்மாதம் ஏற்றமும் இறக்கமும் கண்ட பலன்கள் உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் ஒன்றாக குடும்ப விவகாரங்களை வெளியில் செல்வதை தவிர்க்கவும். பெண்கள் அதிகம் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய மாதமாக இருக்கும். வார்த்தைகளை ஒருமுறை வெளியில் விட்டு பின் அதனை மீண்டும் எடுத்துக் கொள்வது முடியாத காரியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடக்க புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலையில் கூடுதல் அக்கறை உண்டாக கூடும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை மேலோங்கி காணப்படும். உங்களுடைய எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து காட்டுவீர்கள். ஜெயம் உண்டாக ஹனுமனை வேண்டி வழிபடுங்கள்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இம்மாதம் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். பண ரீதியான விஷயங்களில் சில ஏமாற்றங்களை சந்திக்கலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. கூடுமானவரை மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு பொறுப்பையும் ஒப்படைக்காதீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டும்படியான செயல்களைச் செய்வீர்கள். பெண்களுக்கு உடலில் சோர்வு உண்டாகும், வேலை பளு அதிகரிக்கும். தேவையான ஓய்வு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது. வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க மகாலட்சுமி வழிபாடு செய்து வாருங்கள்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.