வைகாசி மாத ராசி பலன் – 12 ராசிக்கும் துல்லிய கணிப்பு

vaikasi

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம், சற்று சுமாரான மாதமாகத் தான் பிறக்கப் போகின்றது. கவலைப்படத் தேவையில்லை. குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் வந்தால், கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் விட்டு கொடுத்து செல்வது நல்லது. அனாவசிய பேச்சின் மூலம் பிரச்சினைகள் பெரியதாவதற்கு வாய்ப்பு உள்ளதால், விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அளவோடு பேசினால் இந்த மாதம் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து சுலபமாகத் தப்பித்துக் கொள்ளலாம். வீட்டில் சுப காரியம் நடப்பதாக இருந்தால் அடுத்த மாதம் தள்ளிப் போடுவது நல்லது. சொந்தத் தொழிலில் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். அலுவலகப் பணியில் இருப்பதை விட, இன்னும் கவனமாக இருப்பது நல்லது. தினந்தோறும் துர்க்கை அம்மனை நினைத்து வீட்டிலிருந்தே வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமான மாதமாக தான் இருக்கப் போகின்றது. இதுநாள் வரை உங்கள் வீட்டில் இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைத்துவிடும். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம் புதியதாக சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் தாராளமாக வாங்கலாம். வரவே வராது என்று முடிவு செய்து வைத்திருந்த கடன் கூட, வசூலாகிவிடும். உங்களுடைய வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகள் செய்யலாம். அலுவலகப் பணியில் நீங்கள் எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தினம் தோறும் மகாலட்சுமியை நினைத்து வீட்டிலிருந்து தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்கள் இந்த மாதம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும், சிந்தித்து செயல்படுவது நல்லது. முடிந்தவரை பணபரிமாற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். வரக்கூடிய வருமானத்தை சேமிக்க பாருங்கள். அனாவசிய செலவை தவிர்த்துவிடுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்வதை தவிர்த்துக் கொள்ளலாம். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் உங்களது பணியை இன்னும் சிறப்பாக, அதிக முயற்சி எடுத்து செய்ய வேண்டும். முடிந்தவரை கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தினந்தோறும் குருபகவானை வீட்டிலிருந்து நினைத்து வழிபடுவது நல்லது.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றி நிச்சயம் உண்டு. பணவரவிற்கு எந்த ஒரு தட்டுப்பாடும் ஏற்படாது. உங்கள் குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். அலுவலக பணி சம்பந்தமாக வெளியிடங்களுக்கு செல்வதாக இருந்தால் மட்டும் பயணங்களின் போது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. உங்களுடைய மேலதிகாரிகள் உங்களுடைய திறமைகளைப் புரிந்து கொள்ளும் காலம் வந்துவிட்டது. தினம்தோறும் சிவபெருமானை நினைத்து வீட்டில் இருந்து 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்யுங்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றியைத் தரக்கூடிய  மாதமாகத்தான் பிறக்கப் போகின்றது. புதிதாக சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் வாங்கலாம். பணப்பற்றாக்குறை இருப்பது போல் தெரிந்தாலும், செலவுக்கு ஏற்ற வருமானம் வந்துவிடும். பண பரிமாற்றத்தில் மட்டும் சற்று கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியம். வியாபாரம் எப்போதும்போல் செல்லும். வேலை தேடி முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். லாக்டோன் முடிந்து அலுவலக பணிக்கு செல்பவர்கள், அவரவர் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தினம்தோறும் விநாயகரை நினைத்து வீட்டிலிருந்தே வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக தான்
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகிவிடும். புதிய முதலீடு செய்யலாம். வீட்டில் சுப காரியங்களை நடத்தலாம். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியாக இருந்தாலும் இந்த மாதம் வெற்றியடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். தினந்தோறும் முருகர் வழிபாடு மன அமைதியைத் தேடி தரும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று மந்தமான மாதமாக தான் பிறக்கப் போகின்றது. பயணத்தின் போது சற்று கவனம் தேவை. உங்களுடைய பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது. செலவிற்கு தகுந்த வரவு இருந்தாலும், சிக்கனமாக செலவு செய்ய வேண்டியது அவசியம். அனாவசிய செலவை தவிர்த்துக் கொள்ளவும். குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால், வார்த்தையில் கவனம் தேவை. விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகப் பணி எப்போதும் போல் செல்லும். தினம் தோறும் வீட்டில் இருந்தே அனுமனை நினைத்து வழிபாடு செய்வது மன தைரியத்தை அதிகரிக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. அலுவலகப் பணிகள், இதுநாள் வரை இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பாக செல்லும். சொந்தத் தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவு லாபத்தை அடைய வாய்ப்பு உள்ளது. வீட்டில் தடைப்பட்டிருந்த சுப காரியங்களைத் தொடங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். அவ்வபோது போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும், இந்த மாதம் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தினம் தோறும் குலதெய்வ வழிபாட்டை மறக்க வேண்டாம்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி தரும் மாதமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். தொழிலில் இதுநாள்வரை இருந்த மறைமுக போட்டியாளர்களின் தொல்லை இனி இருக்காது. அலுவலக சம்பந்தப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் சிலருக்கு இடமாற்றம் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மனநிறைவோடு இருப்பீர்கள். பயணத்தின் போது கவனம் தேவை தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதி தேடித்தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் லாபத்தை தரக்கூடிய மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வியாபாரத்தில் நீங்கள் எதிர்பாராத லாபத்தை அடைய போகிறீர்கள். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை இது வெயில் காலம் என்பதால், உடலை குளிர வைக்கும் பொருட்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். முடிந்தவரை பண பரிமாற்றம் செய்வதை தவிர்த்துக் கொள்வது நல்லது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நல்ல பலனைத் தேடித்தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமான மாதமாக தான் பிறக்கப் போகின்றது. உங்களுக்கு பிரச்சினை என்று வந்தால், அதை தீர்க்க உடன்பிறந்தவர்கள் கைகொடுப்பார்கள். உறவினர்களிடம் பேசும் போது சற்று அமைதியாக பேசுவது நல்லது. அனாவசிய பேச்சைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எல்லா விஷயத்திற்கும் கோபப்படுவதை நிறுத்தி கொண்டால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்து விடலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். சொந்தத் தொழில் எப்போதும்போல் செல்லும். புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். அலுவலக பணியில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது. எல்லா விஷயத்திலும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தினந்தோறும் சிவபெருமானை நினைத்து வீட்டில் இருந்தே தியானம் செய்தால் மனம் நிம்மதி அடையலாம்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி தரும் மாதமாக தான் பிறக்கப் போகின்றது. வியாபாரம் எப்போதும்போல் செல்லும். நல்ல லாபம் கிடைக்கும். எந்த ஒரு புதிய முயற்சிகளை மட்டும் வியாபாரத்தில் தொடங்க வேண்டாம். அலுவலகப் பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நல்ல பாராட்டு கிடைக்க வாய்ப்பு உள்ளது. முன் கோபத்தை சற்று குறைத்துக் கொண்டால், மேலும் வாழ்க்கையில் முன்னேற முடியும். சுறுசுறுப்பாக வேலையை முடிக்கும் உங்களுக்கு, வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தான் பிரச்சனை. தினந்தோறும் சிவபெருமானை நினைத்து 5 நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்வது மன அமைதியைத் தரும்.

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.