5 மாதத்திற்கு சனிபகவானால் இந்த 5 ராசிக்கு ராஜ யோகம் தான். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் வரப்போகிறது.

sani bagavan rasi
- Advertisement -

சனிபகவான் பெயர்ச்சி இருப்பது ஜோதிட சாஸ்திரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக பெயர்ச்சியாக உள்ளது. அந்த வகையில் வருகிற ஜூன் மாதம் 17ஆம் தேதி சனி பகவான், தற்போது இருக்கின்ற ராசியான கும்ப ராசியில் வக்ர கதி அடைகிறார். இந்த வக்ர பயிற்சி காலம் நவம்பர் 4 ஆம் தேதி வரை நீடிக்கின்றது. சனியின் இந்த வக்ர கதி காரணமாக, சில ராசிகளுக்கு கேந்திர திரிகோண ராஜ யோகம் மற்றும் ஷஷ யோகம் என இருவகை யோகங்கள் ஏற்படுகின்றது. இந்த இரண்டு யோகங்களால் பயன்பெறவிருக்கின்ற ராசியினர் யார் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த சனி வக்கிரப் பெயர்ச்சி காரணமாக கேந்திர திரிகோண ராஜ யோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தால் ரிஷப ராசியினருக்கு பலவித அனுகூலங்கள் ஏற்படும். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிர பகவானுக்கு சனி பகவான் நட்பு கிரகம் ஆவதால், இந்த ராசியினருக்கு தொழில், வியாபார ரீதியிலான பல முன்னேற்றங்கள் இருக்கும். புதிய வாகனம், வீட்டு மனை வாங்க கூடிய அமைப்பும் உருவாகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழான பணியாளர்களால் நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். திருமணமான தம்பதிகளுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த சனி பெயர்ச்சியால் ஷஷ யோகம் ஏற்படுகிறது. இந்த ஷஷ யோகம் காரணமாக சிம்ம ராசியினருக்கு எதிர்பாராத வழிகளில் பணவரவு ஏற்படும். படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதீத அதிகாரங்கள் மிக்க பதவிகள் கிடைக்க பெறுவார்கள். திருமண வயதிலிருக்கின்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல பலன் அமையும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் நீங்கும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் கேந்திர திரிகோண ராஜயோகம் ஏற்படுகிறது. இந்த யோகத்தால் துலாம் ராசியினர் வாழ்வில் பல அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடு, தொழில் விரிவடைதல் போன்றவை காரணமாக அதிக லாபம் கிடைக்கும். பெண்கள் வழியில் எதிர்பாராத பண வரவும் சிலருக்கு ஏற்படும். சமுதாயத்தின் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். காதல் திருமண முயற்சி போன்ற விடயங்களில் வெற்றி உண்டாகும். வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சிலர் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள்.

- Advertisement -

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியால் ஷஷ யோகம் ஏற்படுகின்றது. ஷஷ யோகம் காரணமாக இந்த ராசியினருக்கு பொருளாதார நிலை உயரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் முழுமையாக வந்து சேரும். சகோதர வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்கள் மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள், ஒப்பந்தம் போன்றவை கிடைக்கப் பெற்று மிகுந்த லாபம் பெறுவார்கள். கருத்து வேறுபாடால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். வேலையில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய ஆபரணம், வாகனம், சொத்துக்கள் வாங்குகின்ற யோகம் ஏற்படும்.

கும்பம்
சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியினருக்கு, இந்த சனி வக்கிர பெயர்ச்சியால் சச யோகம் ஏற்படுகின்றது. இதனால் குடும்பத்தில் நீண்ட காலம் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் தீர்ந்து ஒற்றுமை ஏற்படும். பெரியவர்களின் ஆதரவு முழுமையாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளின் திறமையால் எதிர்பாராத லாபங்கள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு பயணங்களாலும் ஆதாயம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் கூடுதல் வருமானம் பெறுவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவும் அவர்களுக்கு இருக்கும். சிலர் ஆன்மீக ரீதியான காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு நன்மைகளை பெறுவார்கள்.

- Advertisement -