சுடச்சுட சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பல பொரியல்கள் இருந்தாலும், ஒரு முறை இந்த வாழைக்காய் பொரியலை செய்து சுவைத்துப் பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்

valaikai-1
- Advertisement -

தினமும் ஒவ்வொரு வீட்டிலும் பல வித உணவுகளை சமைக்கின்றனர். ஆனால் ஒரு சில நாட்களில் ஒவ்வொரு காய்கறிகள் கிடைப்பதில்லை. எந்த சீஸனில் எந்த காய்கறிகள் கிடைக்கின்றதோ அதனை வாங்கி சமைப்பதுதான் அனைவரின் வழக்கமாக இருக்கும். ஆனால் வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும். எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். ஆனால் இதில் பஜ்ஜி, பொரியல், வறுவல் என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும் மிகவும் சுவையாக இருக்கும். இதனை இட்லி, தோசையுடன் அல்லது சாதத்துடன் தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான வாழைக்காய் பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் – 2, வெங்காயம் – 2, தக்காளி – ஒன்று, பூண்டு – மூன்று பல், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் தக்காளி, வெங்காயம் இவை இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் வாழைக்காயின் மேல் உள்ள தோலை முழுவதுமாக சீவி விட்டு, அதனையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் அரை ஸ்பூன் கடுகு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் 3 பல் பூண்டை நன்றாக தட்டி, எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்னர் இவற்றுடன் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இதன் மீது லேசாக தண்ணீர் தெளித்து மூடி போட்டு, 10 நிமிடத்திற்கு வேகவைக்க வேண்டும். பின்னர் வாழைக்காய் நன்றாக வெந்ததும், அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கலந்துவிட வேண்டும்.

அதன் பிறகு பதினைந்து நிமிடங்கள் அப்படியே வாழைக்காயை வேக விடவேண்டும். பின்னர் தட்டை திறந்து ஒருமுறை நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொரியல் தயாராகிவிட்டது. இதனை எந்த வகை குழம்பு சாதத்துடன் வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் அற்புதமாக இருக்கும்.

- Advertisement -