- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவளர்பிறை சூரிய சதுர்த்தி வழிபாடு

வளர்பிறை சூரிய சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

முழுமுதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதேபோல் நவகிரகங்களுக்கு தலைவராக திகழக் கூடியவர் சூரிய பகவான் என்பதும் நாம் அறிந்ததே. இவர்கள் இருவருக்கும் உரிய சிறப்பு வாய்ந்த நாளாக திகழ்வதுதான் ஞாயிற்றுக்கிழமையோடு வரக்கூடிய வளர்பிறை சதுர்த்தி திதி. இந்த நாளில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு தொழில் சிறந்து விளங்கும், சௌபாக்கியமும் ஐஸ்வர்யமும் பெருக ஆரம்பிக்கும், வேலை தொடர்பான காரியங்களில் இருக்கும் தடைகள் விலகும், அரசு சார்ந்த துறைகளில் உள்ள தடைகள் விலகி வெற்றிகள் உண்டாகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வளர்பிறை சூரிய சதுர்த்தி நாளன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வளர்பிறை சூரிய சதுர்த்தி வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் பெருக வேண்டும், சௌபாக்கியம் உண்டாக வேண்டும், நாம் செய்யக்கூடிய செயல்களில் நமக்கு வெற்றிகள் ஏற்பட வேண்டும், தடைகள் அனைத்தும் விலகி ஓட வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள் முதலில் வழிபடக்கூடிய தெய்வமாக திகழ்பவர் தான் விநாயகப் பெருமான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை நாம் வளர்பிறை சதுர்த்தி நாளில் வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான வளங்களையும் நம்மால் பெற முடியும். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வளர்பிறை சதுர்த்தி நாளன்று நாம் சௌபாக்கிய லட்சுமி கணபதியாக வழிபாடு செய்யும் பொழுது அனைத்து விதமான சௌபாக்கியங்களும் நம்மை வந்து சேரும்.

- Advertisement -

ஜூன் மாதம் 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வளர்பிறை சூரிய சதுர்த்தி வருகிறது. அன்றைய நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்வதற்கு வீட்டு பூஜை அறையில் விநாயகர் பெருமாளுக்கு முன்பாக ஒரு தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் முழு கோதுமையை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே கிழியாத நல்ல வெற்றிலையாக ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலைக்கு நடுவே ஏதாவது ஒரு நாணயத்தை வைக்க வேண்டும். அந்த நாணயத்திற்கு குங்குமத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த குங்குமத்திற்கு மேலாக மஞ்சளில் பிடித்த ஒரு பிள்ளையாரை வைக்க வேண்டும். அந்த பிள்ளையாருக்கு குங்குமம் மற்றும் ஒரு கோதுமையை வைத்து பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த பிள்ளையாருக்கு அருகம்புல்லையும் மலர்களையும் சமர்ப்பணம் செய்து கோதுமையால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு உணவு பொருளை நெய்வேத்யமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த உணவுப் பொருளுடன் விநாயகர் பெருமானுக்கு பிடித்தமான வெல்லம் அல்லது கருப்பட்டியை வைக்க வேண்டும். அடுத்ததாக கையில் கோதுமையையோ அல்லது மஞ்சள் கலந்த பச்சரிசியான அட்சதையையோ வைத்துக் கொண்டு விநாயகப் பெருமானின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்ரீம் கம் சௌமியாய லட்சுமி கணபதயே வர வரத சர்வ ஜனமே வசமாய ஸ்வாகா”

மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு கற்பூரம் காட்டும் பொழுது சூரிய பகவானுக்கும் கற்பூரம் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மணி நேரம் கழித்து தட்டில் பரப்பிய கோதுமையில் சிறிதளவு கிழக்கு திசை பார்த்தவாறு தூவி விட வேண்டும் மேலும் அதனுடன் ஏதாவது ஒரு இனிப்பு பொருளையும் தூவி விட வேண்டும். மஞ்சளில் பிடித்து வைத்த பிள்ளையாரை சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து சிறிதளவை மட்டும் எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு மீதம் இருக்கக்கூடிய மஞ்சளை நிலை வாசலிலும் துளசி செடியிலும் பூசி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கோமுக தீர்த்தம் மகிமைகள்

இப்படி செய்வதன் மூலம் கிரகங்களால் ஏற்படக்கூடிய தடைகளும் நீங்கும், நம்முடைய முயற்சிகளும் வெற்றி அடையும், சௌபாக்கிய லட்சுமியின் அருளாலும் கணபதியின் அருளாலும் அனைத்து விதமான ஐஸ்வர்யமும் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்