நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் ஏதாவது ஒரு தெய்வத்தை நம்பி வழிபாடு செய்வோம். வேண்டுதலை வைப்போம். பிரார்த்தனை என்று கூட இதை நாம் கூறலாம். இந்த ஒரு காரியம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் ஒரு புறம் இருப்பார்கள். மற்றொருபுறமோ இந்த விஷயம் நடந்து விட்டால் இந்த பொருளை உனக்கு தருகிறேன் என்றும் வேண்டிக் கொள்வார்கள். இப்படி எந்தவிதமான வழிப்பாடாக இருந்தாலும் வேண்டுதலாக இருந்தாலும் அது நிறைவேறாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
வழிபாடும் வேண்டுதலும் நிறைவேற
பொதுவாக முழுமனதோடு நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்குரிய பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி முழுமனதோடு நாம் செய்யவில்லை என்றால் அந்த வழிபாட்டிற்குரிய பலன் நமக்கு கிடைக்காது. முழு மனதோடு செய்தும் வழிபாட்டு பலனை பெற முடியவில்லை என்றால் அதற்கு கண்டிப்பான முறையில் முன்னோர்களின் சாபமே காரணமாக திகழும். இந்த முன்னோர்களின் சாபத்தை நீக்கி விட்டாலேயே நம்முடைய வழிபாட்டிற்குரிய பலனை நம்மால் பெற முடியும். அதைப்பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
முன்னோர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது அமாவாசை தான். அதிலும் முன்னோர்களின் சாபம் நீங்க வேண்டும் என்றால் முன்னோர்களை வழிபட வேண்டும். அப்படி முன்னோர்களை வழிபடுவதற்குரிய முக்கியமான நாளாக தான் அமாவாசை திகழ்கிறது. அன்றைய நாளில் தான் நாம் பசு மாட்டிற்கு சில பொருட்களை தானமாக தர வேண்டும். அப்படி ஒவ்வொரு அமாவாசை தோறும் நாம் இந்த குறிப்பிட்ட பொருட்களை பசு மாட்டிற்கு தானமாக தருவதன் மூலம் முன்னோர்களின் சாபம் நீங்கும். பித்ரு தோஷம் விலகும். நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். வழிப்பாட்டின் முழு பலனையும் பெறுவோம். பிரார்த்தனைகள் நிறைவேறும் என்று கூறிக் கொண்டே செல்லலாம்.
அமாவாசை நாள் அன்று எந்த கிழமையில் வந்தாலும் அன்று காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். முதல் நாளே பின்வரும் இந்த பொருட்களை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். அந்த பொருட்கள் பச்சரிசி 100 கிராம், கருப்பு எள் 50 கிராம், வெல்லம் 100 கிராம், அகத்திக்கீரை ஒரு கட்டு, வாழைக்காய் ஒன்று. அமாவாசை அன்று வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு காலையில் எந்த உணவும் அருந்தாமல் இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு அருகில் பசுமாடு எங்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்று பசு மாட்டிற்கு இதை தானமாக தர வேண்டும்.
பிறகு வீட்டிற்கு வந்து முன்னோர்களின் வழிபாட்டை செய்து காகத்திற்கு உணவு வைத்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இப்படி யார் ஒருவர் தொடர்ச்சியாக ஒவ்வொரு அமாவாசை தோறும் செய்து வருகிறார்களோ அவர்களின் வாழ்க்கையில் கஷ்டம் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போகும். மேலும் அவர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றிகள் உண்டாகும். வழிபாட்டின் பலனை முழுமையாக பெறுவார்கள்.
இதையும் படிக்கலாமே:கடன் தீர்க்கும் பெருமாள் மந்திரம்
நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்திற்கு காரணம் முன்னோர்களின் சாபம் என்றால் அந்த சாபத்தை நீக்குவதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும். அந்த வகையில் இந்த தானத்தை பசு மாட்டிற்கு நாம் செய்வதன் மூலம் அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.